பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 95 களில் பணிபுரிவோர் நேரத்துக்கு வரவேண்டும். அரசியல், அது இது பேசலாகாது. எல்லாக் கட்டுப்பாடுகளும் சரிதான். இரண்டு பிள்ளைகள் இருப்பவர், ஆண்கள், காவல்துறையானாலும், எந்தத் துறையானாலும் அறுவைச் சிகிச்சைக்குட்பட்டாக வேண்டும். ஒருவகையில் இடம் பெயர்ந்த ஏழைப் பெண்கள் மகிழ்ந்தார்கள் எனலாம். அவர்களுக்கென்று நீர், மின்விளக்கு வசதியுடன் வாழ் விடங்கள் வந்தன. நாடு முழுவதும் ஆண் அறுவைச்சிகிச்சை வலியுறுத்தப் பட்டது. தரகர்கள், கிழவர்கள், இந்து முஸ்லிம் பேதமில்லை. பதினான்கு வயசு மனநிலை சரியில்லாத சிறுவன் என்று ஆள் பிடித்துக் காசு சம்பாதிக்க அறுவை சிகிச்சைக் கணக்குக் காட்டினார்கள். சஞ்சய் காந்திக்கு அந்த நாட்களில் கட்சியிலும், ஆட்சி அரசியலிலும் எந்தப் பொறுப்பும் இல்லை. அரசியலுக்கும் நிர்வாகத்துக்கும் அவர் புதியவரானாலும், அன்னையின் தயவால் கட்சியில் அளவுகடந்த செல்வாக்கைப் பெற்றார். மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுச் செயல்பாட்டில் தயக்கம் காட்டியதைத் தொடர்ந்து மாநிலங்களில் மைய அரசின் அதிகாரத்தைப் பிரயோகிக்க, அரசியல் சாசனத்தின் சட்டவிதியி GeoGull 3053:5ub Glomator(S 61sh;56&rff. (Constitution Forty Second Amendment Act 1976) அரசு ஆணை என்பது காகிதம் அல்ல. செயல்பாடு - என்ற தீவிரம் காட்டப்பட்டது. உத்தரப் பிரதேசத்துக்கு 175000 ஆண் அறுவைச் சிகிச்சை இலக்கு வைக்கப் பட்டது. 75 - 76 ஆண்டுகளில் 83,700 பேருக்கு மட்டுமே சிகிச்சை சாத்தியப்பட்டது. அதிரடியான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டதன் விளைவாகவும், மக்கள் எதிர்ப்பு ஒடுக்க இயலாதவை என்று இந்திரா உணர்ந்தார். எனினும் குடும்ப நலத்திட்டம், ஆண்களைக் குறிவைத்து அதிரடியாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவே அதிருப்தியைக் கொண்டு வந்தது. மார்ச் 77 இல், அவர் அரசைக் கலைத்துத் தேர்தல் அறிவித்தார். ஜனவரியில் தேர்தல். எந்த மாநிலங்களில் - குறிப்பாக உத்தரப்பிரதேசம் - அறுவைச் சிகிச்சை கட்டாயமாக்கப் பட்டனவோ, அங்கு அவர் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அவர், மகன், இருவரும் உத்தரப்பிரதேசத்தில் தோற்றனர்.