பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ /ெகருக்கடி... 96 பிரதமர்களை அதுகாறும் தேர்ந்தெடுத்த கட்சி தோற்றது. அடுத்து மார்ச் 77 இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. உடனே இந்திரா காந்தியின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கைவிட்டது. மாறாக, குடும்ப நலக் கொள்கையை அறிவித்தது. இதன் சாரம், அரசு வலியுறுத்தாது என்பதுதான். நெருக்கடி நிலைக் காலத்தில் 76 -77 காலகட்டத்தில் 35.2 - 34.4, 33.0 என்று குறைந்திருந்த மக்கள் தொகை ஏறுமுகம் கண்டது. 1980 இல் காங்கிரஸ் அரசு, சுகாதாரம், குடும்ப நலம் என்று புதிய மக்கள் தொகைக் கொள்கையை வகுத்தது. ஆனாலும், கொள்கைகள் காகிதத்திலும், அரசு இயந்திரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கையாகவும் மட்டும் இருந்தன. அதிரடி நடவடிக்கை... அதுவும் ஆண்களைக் குறிவைத்த அறுவை சிகிச்சை, தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்ற அச்சம் எல்லாக் கட்சி ஆட்சியாளருக்குமே இருந்தது. பலன், பெண்ணே, மீண்டும் மீண்டும் பலிகடாவாக்கப்படுகிறாள்! ஆணுக்கான அறுவைச் சிகிச்சை முறை, மிக எளிதானது. சிக்கல் இல்லை. கால் மணிக்குள் முடிந்துவிடும். இதனால் மனிதன் ஆண்மை இழக்கமாட்டான். கடும் வேலை செய்யலாம். முன்பு எத்தகைய பலவானாக இருந்தானோ, அப்படியே இருக்கலாம் என்றெல்லாம் வானொலியில் இந்தப் பிரசாரம் அழகிய மெட்டுகளில் தாளம் தவறாமல் சொல்லப்படுகிறது. ஆனாலும், 'நஸ்பந்தி (வாசக்டமி) என்ற ஆணின் விந்துக் குழாய் அறுவைச் சிகிச்சைக்குச் செல்வாக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 17. வதைபடும் வறுமையில் 'மங்கல’ப் பெண்மை 'அவங்க ஆபரேசன் பண்ணிட்டாங்க. குழந்தைப் பிறக்காது” என்று எதுவும் தெரியாத பையனும் புரிந்து கொள்ளும் ஒரு மக்கள் தொகைக் கட்டுப்பாடு சார்ந்த செய்தி பொதுவாக, பெண்ணையே குறிக்கிறது. ஏனெனில் உலக முழுவதும்