பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 97 இருநூறுக்கும் மேற்பட்ட கோடி மக்கள் கருத்தடைக்கான (துண்டிப்பு) மருத்துவச்சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கில் 120 கோடிக்கு மேற்பட்ட பெண்களே சிக்கலான கருக்குழாய் துண்டிப்பு சிகிச்சைக்கு உட்பட்டிருக்கின்றனர். ஆண்களுக்கான விந்தணு குழாய் துண்டிப்புக்கான (வாசக்டமி) சிகிச்சை எளியதும், பாதுகாப்பானதும், சிக்கல்கள் இல்லாதவை யுமாகப் பலனளிக்கக் கூடியதென்றாலும், ஆண் முன் வந்து அந்த சிகிச்சைக்கு ஒப்புவதில்லை. ஏன்? பெண் (மனைவி) கருத்தடை சிகிச்சை செய்து கொள்வதற்கே ஒப்புதல் கொடுக்காத ஆண், தன்னை அறுவைச் சிகிச்சைக்கு உட்பட ஒப்புவானா? ஏனெனில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகும் தன்மையில் தான் தன் ஆளுமை விளக்கமடைவதாக காலம் காலமாக ஆண் குன்றேறி நின்று பெண்ணை அடக்கிக் கொண்டிருக்கிறான். 'இவள், என்ன தாய்? நான் இல்லாமல் இவள்தாயாக முடியாது?’ என்று ஓங்கிய ஆதிக்கத்தில் அவள் என்றோ ஒடுங்கி மனம், மெய் இரண்டையும் பூச்சியமாக்கி இருக்கிறாள். எனவே, மருத்துவர், 'அம்மா, உன்னால் இனிக் கருத்தரித்துப் பிள்ளை பெற இயலாது. உன் உயிருக்கும் பிள்ளை உயிருக்கும் உத்திரவாதம் இல்லை. உனக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்வ தற்கும் இப்போது இயலாது. உன் புருசனைச் சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லலாமே?’ என்று பரிந்துரைப்பார். ייו 'அய்யோ? அது வேணாங்க. எனக்கே பண்ணிடுங்க! என்பாள் அபலைப் பெண். இவள் வரலாறு அறிந்த மருத்துவர் விழிப்பார். பதினான்கு வயதில் திருமணம். பதினாறு வயதுக்குள் மூத்த பிள்ளை. பையன்தான். நோஞ்சனானாலும், 'ஆண் குழந்தை. குழந்தை பிறந்தபோது, பதினாறே வயது. புருசனுக்கு இருபத்து நான்கோ, இருபத்தைந்தோ வயசு. குடும்ப வருமானத்துக்கு உத்தரவாதமான வேலை இல்லை. கிராமத்திலிருந்து சென்ற தலைமுறையில் இடம் பெயர்ந்த குடும்பம். இரண்டு பேரும் முறை உறவினர். இருவரின் தந்தையாரும் குடி'காரர்கள். தத்தம் மனைவியர் வீடுகளில் வேலை செய்தும், சிறு தொழில் செய்தும் குடும்பம் பெருக்கியவர்கள். இந்த ஆபரேஷன் முறைகளுக்கு உட்பட்டு நான்கு ஐந்து என்ற மக்கட்பேறுடன் நின்றுவிட்டார்கள். எவனேனும் குடிகாரன் புதுமலரைக் கசக்கிவிடக்கூடாதென்று அப்பனும் சுப்பனும் 2- - 7