பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ வதைபடும்... 98 ஒத்துப் போய் மணமுடித்துவிட்டார்கள். முதல் குழந்தைக்கு ஏழு மாசம் ஆனதும், நம் நாயகி கர்ப்பமாய் விட்டாள். நாயும் குட்டிகளுடன் தங்கமுடியாத நெருக்கத்தில், இந்தக் கருவுறல் நிகழ்ச்சி நடந்தேறுகின்றன. மருத்துவர் பார்த்துவிட்டு, (இதுவும் கார்ப்பரேஷன் தரும மருத்துவம்தான்)"ரொம்ப பலவீனமாயிருக் கேம்மா, புள்ளக்கித்தாய்ப்பால் குடுத்திருந்தா இத்தினி சீக்கிரமா புள்ள வந்திருக்காது. ஏம்மா, முன்ன பெத்தபோது டாக்டர் லூப் போட்டுக்கச் சொல்லலியா?’ என்று கேட்டார். 'அத்த வாணான்னிட்டாங்க” என்று பரிதாபமாக விழிப்பாள் பெண். - 'அத்தையோ பொத்தையோ அவங்களா சொமக்கிறாங்க?" என்று மருத்துவர் கடுகடுத்து 'ஊசி போடணும், வாரா வாரம் வா!' என்று தரும் ஊசி, சத்து மாத்திரை கொடுத்து அனுப்புகிறார். அவரிடம் வரும் 'கேசுகள் முக்காலும் இதே ரகம்தான். குழந்தை குறை மாதத்தில் பிறந்தது. பிழைக்கவில்லை. இவர்கள் தரும ஆசுபத்திரியை விட்டு தனியார் மருத்துவமனை ராசி என்று போனார்கள். அங்கே ஏதேதோ பரிசீலனை செய்து, படம்பிடித்துப் பார்த்து, காசநோய் என்று தீர்ப்புச் செய்து, முதல் பிள்ளையை அவளிடம் விடாமல், ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். தருமங்களுக்கும் பஞ்சமில்லை. உடம்பு தேறி வந்தாள். மீண்டும் கர்ப்பம். பத்தொன்பது வயசுக்குள் மூன்றாவது கர்ப்பம். காசநோய் தாக்கி மீண்ட உடல், இம்முறை இரட்டைக் கருக்கள். ஆண்டவனுக்கு இந்த ஏழைப் பெண்கள் மீது இவ்வளவு கருணையா? வறுமை மிஞ்சும் குடும்ப உறவுகள் சமயங்களில் விட்டுக் கொடுப்பதில்லை. மாய்ந்து மாய்ந்து ஆதரித்தார்கள். அரசு பொது மகப்பேறு மருத்துவமனையில் ஆணொன்று, பெண் னொன்று பிறந்து உடனே மரித்தன. மருத்துவர் பரிந்துரை செய்து, லூப் போட்டு விட்டார். அவ்வப்போது வந்து காட்ட வேண்டும் என்றார். இவளும் தவறாமல் சென்றாள். அந்த மருத்துவரே அகப்படுவாரா? பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லி அனுப்பினார்கள். ஏறக்குறையை ஒரு வருடம் சென்றது. அடிவயிற்றில் வலி தாங்கமுடியவில்லை. காய்ச்சல், உடலே வீங்கினாற் போலாயிற்று. கொஞ்சம் படித்து உயர்ந்த பொருளாதார நிலையில் இருந்த உறவுக்