பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 99 காரப் பெண், அவருக்குத் தெரிந்த மருத்துவமனை மருத்துவரிடம் கூட்டிச் சென்று சேர்த்தாள். அறுவைச் சிகிச்சை செய்து லூப் சாதனத்தை எடுத்தார்கள். அத்தை, அம்மா, சித்தி உறவுகள் மகப்பேறு மனை அரசு மருத்து வர்களைப் பொறுக்கி எடுத்த வசைகளால் முழுக்காட்டினார்கள். இனி எந்தப் பிரசவத்திற்கும் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று சத்தியம் செய்தார்கள். ஆக, நாயகி தேறி வந்தாள். ஒற்றைப் பையன்தானே? அவன் பள்ளிக்கூடம் போகிறான். இப்போது மீண்டும் கர்ப்பம். இருபத்தி மூன்று வயது. இந்தப் புதிய அரசு அல்லாத மருத்துவமனையில் பழைய வரலாறு அறிந்து மாத்திரைகள், தடுப்பூசி என்றெல்லாம் கர்ப்பிணியின் சுகப்பிரவசத்துக்கு அறிவுரைகள் நல்கினார்கள். ஒருவகையில் நம்பிக்கை என்றாலும், வயிறைக் கிழித்துத்தான் குழந்தையை வெளியாக்க வேண்டியிருக்கும். ஐயாயிரம் உடனே தேவையாகும் என்று அச்சுறுத்தினார்கள். வேண்டாத தெய்வங்களில்லை. ஐயாயிரம் செலவில்லாமல் பிள்ளை (ஆண்) பிறந்துவிட்டது. சுவர்க்கமே இறங்கி வந்துவிட்டது. இந்த நிலையில் கருக்குழாயைத் துண்டிக்கும் சிகிச்சையைச் செய்ய இயலாது என்றே மருத்தவர், ஆணை அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளப் பரிந்துரைத்தார். இடமில்லாத இடத்தில் மனைவியைக் கருவுறச் செய்யும் ஆள், நிரோத், ஆணுறை என்றாலே, 'சீ' என்று முகம் சிவந்து நானு வானாம்! 'குடும்பத்துல இதெல்லாம் எப்படி?’ என்று வெட்கப் படுவானாம்! அவன் அப்பனைப் போல் குடிக்காதவன். பள்ளிப் பரிட்சை தேறவில்லை. ஒழுக்கமானவன்; நாணயமானவன். வேலை கிடைத்தால் உழைப்பான். இத்தகைய நற்சான்றுகளைத் தாய்மார், அத்தைமார் கொடுக்கிறார்கள். பிறந்த குழந்தை, தாய்ப் பால் குடிக்கிறது. ஆனாலும், வாழ்வாதாரங்கள் வற்றும் நிலையில் டெமாக்ளிஸ் வாள்போல் எதிர்காலம் நூலிழையில் தொங்குகிறது. எங்கும் கடன். இருத்தலுக்குப் போராட்டம். அரசு தர்மங்கள் கூட கட்சி ஆட்சியின் விளைவாகவே மக்களைக் கூறுபோடு கின்றன. இவளுடனே பிரசவித்த இன்னொருத்தி. முதலில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அப்பன் குடிகாரன். முதலில் பையன். இரண்டாவது மகன். அது காது கேளாத பேசாத ஊனமுற்ற