பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ வதைபடும். . . 100 குழந்தை. மூன்றாவது பிறந்து இறந்து போயிற்று. உடனே நான்காவது பேறு; பிரசவம். இப்போதெல்லாம் புருசனோ யாரோ கருத்தடைச் சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாய மில்லை. இவளே சொல்லிவிட்டாள். 'டாக்டரம்மா, எனக்கு இனி புள்ள வேணாம். ஆபரேஷன் பண்ணிடுங்க!' குழந்தை தர்ம ஆசுபத்திரியில் பிறந்தது. சிகிச்சையும் செய்துவிட்டார்கள். வீட்டுக்குக் குழந்தையுடன் வந்துவிட்டாள். உறவுகள் எல்லாம் ஏழ்மையில் கனிந்தும் பொறாமையில் பொங்கியும் மனித உணர்வு களைக் காப்பாற்றிக்கொண்டும் புழுங்கும் உயிர்த்துவங்கள்தாம். குழந்தைகள் குழந்தைகளோடு இருள் பொந்துகளில் சல்லாபித்து சண்டை போட்டு அயர்ந்து உறங்கும் ஒரு உறவு ரசம் சோறு கரைத்து இவளுக்குக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள். குழந்தை பால் குடிக்க, கண்ணுறங்கும் நேரம், புருஷன் என்ற மிருகம் குடித்துவிட்டு, உறவுகொள்ள வருகிறது. இவளுக்கு முடிய வில்லை. மிருகம் அருகில் இருந்த அரிவாள்மனையைத் துாக்க அவள் ஒரு தள்ளுத் தள்ளி அதே அரிவாள்மணையால் அவனை அச்சுறுத்தி விரட்டிக் கதவைத் தாளிடுகிறாள். இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளும் கதைகளல்ல. இலட்சோப லட்சம் பெருகும் வறுமைகளில் பூக்கும் மக்கள் பெருக்கத் துன்பங்கள். கல்வியறிவும், பொருளாதார சுதந்திரமும் பெற்ற பெண்கள்கூட, தாங்களே பாதுகாப்பான உடலுறவுக்கான, கருத்தடைக்கான, கருப்பைச் சாதனங்களைத் தேர்ந்து பயன் படுத்திக் கொள்கிறார்கள். மிகக்குறைவான பெண்களே ஆண்களின் கருத்தடைச் சிகிச்சையை ஏற்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், ஒன்றே ஒன்றுதான். அரசின் செயல்பாடுகள் மக்களை, பெண்களை அந்நியமாக்கித் தீர்த்து விட்டிருப்பதுதான். மக்கள் தொகைக் கட்டுப்பாடு சார்ந்த திட்டக் குழுக்களில் எத்தனை பெண்கள் இடம் பெற்றிருந்தார்கள்? இருக்கிறார்கள்? எல்லாம் (ஆண்டவனுக்கே) வெளிச்சம்! நகர்ப்புறங்களிலும், பேரூர்களிலும் தமிழ்நாட்டைப் பொறுத்த