பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 101 வரை மக்கள் பெருக வேண்டாம் என்ற விழிப்புணர்வு பெண் களுக்கு இருக்கிறது. ஏனெனில் விலைவாசி அன்றாடம் விஷம் போல் உயர்வதாலும், தேவைகளின் பெருக்கத்தாலும், பொருளா தாரச் சுமையின் நெருக்கடியை அவர்களே உணர்ந்திருக்கிறார்கள். பெண் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்வதுதான் பரவலான தீர்வு என்பதை நன்குணர்ந்து முடிவெடுக்கிறார்கள். இவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு நாலைந்து மாதங்கள் உடலுறவு கூடாது என்பதை எப்படியோ கடைப்பிடிக்கிறார்கள். கணவனை விட்டுப் பிரிந்து தாய்விடோ, வேற்றுரோ செல்பவர்களும் இருக்கிறார்கள். புருசன் கருத்தடைச் சிகிச்சை செய்து கொண்டாலும், சில வாரங்களேனும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். மருத்துவர் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவும், பிள்ளைகள் போதும் என்று தீர்மானிக்கவும், மூட நம்பிக்கைகளிலும் அறியா மையிலும், அழுந்தியிருக்கும் மக்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால் ஒரு தேசிய நலனுக்காகப் போடப்படும் திட்டம், மருத்துவர் பேரிலோ, ஏனைய இன்றியமையாத தேவைகள் மீதிலோ வசதிகள் மீதிலோ குறைபாடுகள் நேரிடுகின்றன. மருத்துவ ரீதியாக 5 விழுக்காடு மட்டுமே தவறுதலுக்குச் சாத்தியம் என்று அறிவிக்கப்பட்டாலும், கணக்குக் காட்ட முடியாத நிலையில் தவறுதல்கள், எடுத்துக்காட்டாக மக்களிடையே பரவிவிடுகின்றன. இத்தகையை முரண்பாடுகள் மருத்துவர்களுக்கும் முழுமையான ஈடுபாடுகளுடன் செயல்பட ஊக்கமளிப்பதாக இல்லை. இந்த நிலையிலேயே தலைமுறைகள் வாழ்ந்துகொண்டிருக் கின்றன. 2050 ஆம் ஆண்டில் இந்தியா சீனத்தை விஞ்சிவிடும் என்ற அபாயச் சங்கு ஊதப்பட்டிருக்கிறது. இது இரண்டாயிரத்து நாற்பதிலேயே நிகழ்ந்துவிடும்; மக்கள் தொகை 159 கோடியாக வளரும். சீனத்தில் 139 கோடியிலேயே நிற்கும் என்கிறார்கள். இப்போதே, ஜப்பானில் முதிய சமுதாயம், நூறு வயதும் வாழ்ந்து தனிமையை அனுபவிக்கும் கொடுமையும் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையும், ஆரோக்கியமான சமுதாயம், வளர்ச்சியடையும் இளமைத்துள்ளலையும் பிரதிபலிக்கும் சமுதாயம் என்று வாழ்க்கை நீரோட்டத்தை நம்பிக்கையோடு கொண்டு செல்லும் போக்கு தடைபட்டதை அறிவிக்கிறது.