பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உளமார்ந்த நன்றிக்குரியவர்கள் ந்த நூலை எழுத வேண்டும் என்று நான் லட்சியம் கொன்டதற்கு முதற் காரணம், இந்தக் கருத்தடை முறைகளாலும், கட்டாய வலியுறுத்தல்களாலும் தங்கள் உரிமையற்ற உடல்களில் வேதனைகளையும் வலிகளையும் சுமந்து, குரல் எழுப்பத்திராணி இல்லாமலே பெற்ற மக்களிடமும், கட்டிய கணவனிடமும், அன்பு செலுத்தும் லட்சோப லட்சம் அன்னையர்; சமூக பயங்களைச் சுமந்து கொண்டு கட்டாய அறுவைச் சிகிச்சைகளுக்கு உட்பட்டு 'கற்பு’க் கெடாதவர்கள் என்று வாழ்ந்தவர்கள். இத்தகைய ஒரு நூலை எழுதி, துன்பம் சுமந்த, சுமக்கும் பெண்களின் சார்பில் நான் குரல் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று என் இளம் நண்பர்களான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், எம்பிபிஎஸ், அவருடைய மனைவி டாக்டர் ஏ.ஆர்.சாந்தி எம்பிபிஎஸ் அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்த உடனே, அவர்கள் என் நோக்கை ஆதரித்து எனக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள். கருத்தடை மருத்துவ அறிவியல் தொடர்பான அனைத்துச் செய்திகளும், தகவல்களும் அடங்கிய ஒர் அருமையான நூலை, உடனே எனக்கு அனுப்பித் தந்தார்கள். 200 esburru @565,600 jairam Practice of Fertility Control GT681m) solsåg, நூலைக் கண்டதும், என் அறியாமை இருட்டை அகற்றவல்ல ஒளித்தாரகையைக் கண்டாற்போல் துணிவு பெற்றேன். மனித நேய முற்போக்குக் கொள்கையுள்ள அந்த மருத்துவத் தம்பதியர், நூலுக்கு விலையையும் பெற மறுத்துவிட்டனர். பின்னர் நான் அவர்களுடன் எப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உடனே விளக்கங்கள் வரும். இந்தத் தம்பதிக்கு என் உளமார்ந்த நன்றியை முதற்கண் உரித்தாக்குகிறேன். மருத்துவம் தொடர்பான தகவல்கள் மட்டும் அறிந்தால் போதுமா? இது மிகவும் சிக்கலும் பிரச்னைகளும் நிறைந்தது. இந்தக் குடியாட்சி உரிமைகளோடு தனிநபர் உரிமைகள், அரசியல் நிலைகள், சமுதாய மாற்றங்கள், உழைப்பாற்றல், பொருளாதார