பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மேம்பாட்டுக்கான திட்டங்கள், கொள்கை இலக்குகள், சர்வதேச நிலைகள் என்ற பல முரண்பாடுகளில் புகுந்து புறப்பட வேண்டும். ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தம் மாணவப் பருவத்தில் இருந்தே, சமுதாயபூர்வமான ஆய்வுகளை இலக்காக்கி நான் புதினங்களை எழுதும்போதெல்லாம் நண்பராக மட்டுமின்றி, என் சுமைகளை ஏற்று உதவ வந்திருக்கும் திரு. தி.சிகாமணி அவர்கள் பல தகவல்களையும் தந்து உதவியுள்ளார். அவருடைய பங்கு இந்த ஆக்கத்தில் இன்றியமையாததாக அமைந்துள்ளது. கையெழுத்துப்பிரதியைப் பெற்று முதலில் படித்து கருத்துரை வழங்கியும் உதவியுள்ளார். அதேபோல் பேராசிரியை சகோதரி சரஸ்வதி அவர்களும், கால் நூற்றாண்டுக்கு மேல் என்னுடன் நெருங்கி இணைந்தவர்கள். ஒர் இலக்கியவாதி, சமூகப் பார்வையோடு அந்த நோக்கில் மனித நேயத்துக்கான - மனித உரிமைக்கான எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் தோற்றுவிக்கும் சாதனமாகத்தான் எழுத்தைக் கொள்ள வேண்டும். இந்த வகையில் கல்லூரிப் பேராசிரியை யாக (சமூகவியல்) ப் பணிபுரிந்த போதும், பிறகு, மகளிர் - ஒடுக்கப்பட்டவருக்காக, சமூக அநியாயங்களுக்காகக் குரல் கொடுக்கும் வாய்ப்புகளை அவர் வாயிலாகப் பெற்றேன். பல கோணங்களில் சமுதாய மரபுகள், கொடுமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஆர்வம் தோன்றியது. இப்படி ஒரு நூல் எழுதுகிறேன் என்று தெரிவித்ததும், விரைந்து என் இல்லம் வந்து, மகிழ்ச்சியுடன் என் எழுத்துப் பிரதியைப் படித்து, கருத்துரை நல்கியிருக்கிறார். இவர்கள் அனைவரும் கொடுத்த ஆதரவை மறக்கமுடியாது. நன்றி என்ற சொல் வெறும் வார்த்தையாக இக்காலத்தில் அலங்காரமாகப் போய்விட்டது. இந்த ஆக்கம் ஒரு பயனை அளிக்க வேண்டும். அந்த ஆக்கத்தில் இவர்கள் பங்கு சிறப்பானது. நான் இந்த நண்பர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அடுத்து, மகப்பேறு, மகளிர் நோயியல் துறையில் பல பட்டங்களும் மேலான பலதுறை அனுபவங்களும் பெற்ற டாக்டர் ஆர்.வசந்தா (B.A., M.B.B.S., M.D., D.G.O) (55#rl– 3, T60Lb =973, GLTS/ மருத்துவமனைகளில் மகப்பேறு, மகளிர் நோயியல் துறையில் பணியாற்றியவர். மகளிர் உரிமைகளுக்கும், சமுதாயம் சார்ந்த மகளிர் முன்னேற்றங்களிலும் ஈடுபாடு கொண்டவர். கஸ்துரிபா