உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். 28 அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது போலீஸ் நிலையம் என்று இருந்தவற்றை எல்லாம் காவல் நிலையம் என்று மாற்றி இருந்தார் பிறகு மறுபடியும் பக்தவத்சலம் அவர்கள் ஆணையிட்டுக் காவல் நிலையங்களை அழித்துப் போலீஸ் நிலையம் என்று மாற்றிக் கொண்டு விட்டார்கள். நாவலரும் நானும் எதிர்க் கட்சியில் இருந்தபோது ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டோம். அதற்குப்பக்தவத்சலம் அவர்கள் சொன்னார்கள் ; "திருவொற்றி யூரில் தி.மு. கழகம் காவலர் கூட்டம் போட்டது. அதற்குப் பிறகு தான். இந்தக் காவலர் என்பதை அடிக்கச் சொல்லி போலீஸ் என்று போட்டுவிட்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். திருமதி த. ந. அனந்தநாயகி : காவலர் என்றால் வாட்ச்மேன் என்ற அளவிற்கு அர்த்தப்படும். அதைவிட உயர்ந்த வேலையைச் செய்கிறார்கள் போலீஸ்காரர்கள்! ஆகையாலே போலீஸ் என்று போட்டோம் என்றுதான் கனம் பக்தவத்சலம் அவர்கள் சொன்ன தாக ஞாபகம். காரணம் நானும் அப்போது இங்கே அங்கத்தின ராக இருந்தேன். என்று மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : போலீஸ் செய்வது உயர்ந்த வேலை. வாட்ச்மேன் செய்வது தாழ்ந்த வேலை சொல்லி, வாட்ச்மேனைத் தாழ்வாகக் சுருத வேண்டாம் கேட்டுக் கொள்கிறேன். என்று அது தெரிந்தால் முதலிலேயே அவர்கள் காவல் நிலையம் என்று போட்டிருக்கத் தேவையில்லை. காவல் நிலையம் என்று போட்டு விட்டு, பிறகு திருவொற்றியூரில் காவல் கூட்டம் நடந்த தும் மறுபடியும் காவல் நிலையத்தை மாற்றி போலீஸ் நிலையம் என்று போட்டு அதற்கு விளக்கமும் சொன்னார்கள். ஆகவே. தமிழ்ப் பெயரிலே இருக்கும் வெறுப்பின் காரணமாக அதன் தொடர்பாக நல்ல காரியங்களை எல்லாம் எதிர்த்துப் பேசக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேனே அல்லாமல் வேறல்ல! வாரியங்களைப் பற்றி இங்கே பேசப்பட்டது. நம்முடைய கே.டி.கே.தங்கமணி அவர்களும் மற்றும் மாண்புமிகு உறுப்பினர் களும் வாரியங்களை நிறைய வைத்துக் கொண்டே போகிறீர்கள் என்று எல்லாம் சொன்னார்கள். இந்த வாரியங்களை (கார்ப்பரே ஷன்கள்) அதிகமாக வைப்பதற்கு மிக முக்கியமான காரணம், நிர்வாகத்தைப் பரவலாக ஆக்கி. செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஒரு நோக்கம். அடுத்தது,அதிக நிதியை மாநில அரசோ, மத்திய அரசோ அதற்கு ஒதுக்க முடியாத சூழ்நிலையில், வங்கிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/29&oldid=1701922" இலிருந்து மீள்விக்கப்பட்டது