உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். ஆகவே நாம் எடுத்த நிலை துணிவான நிலை. அதே நேரத்தில் உறவு கெடாத நிலை. அதேநேரத்தில் இந்தியாவினுடைய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் வராத நிலை. பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடைய முன்னிலை யிலேயே தமிழக அரசினுடைய கொள்கையைத் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறோம். உறவுக்குக் கை கொடுப்போம்., அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம். இதுதான் திராவிட முன்னேற்றக் சூழ்க அரசினுடைய நிலை என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அது, அரசு இருந்தாலும் சரி. இல்லாவிட் டாலும் சரி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை இதுதான். உறவுக்குக் கை கொடுப்பதும், உரிமைக்குக் குரல் கொடுப்பதும் தான் நம்முடைய நிலைமையாகும். நேற்று ஆறுமுசுசாமி அவர்கள் சொன்னார்கள் மத்திய அரசைக் குறைகூறக்கூடாது, இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பெரி தாக ஆக்கக் கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். இந்தியப் பாதுகாப்பு என்பது தனி விஷயம். இந்தியாவிற்கு ஒரு நெருக்கடி வருகிறது, இந்தியாவைக் காப் பாற்ற வேண்டிய பொறுப்பு ஒன்று வருகிறதென்றால் எல்லாவற் றையும் மறந்துவிட்டு நாம் அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக இருக்கிறோம். நான் இன்னும் பெருமையோடு சொல்விக் கொள்வேன். இந்தியாவிற்குப் பாகிஸ்தானால் ஆபத்து வந்த நேரத்தில் இந்தியாவிலேயே யுத்த நிதிக்காக 6 கோடி ரூபாயைத் திரட்டிக் கொடுத்த ஒரேயொரு மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான் என்பதை நான் தெரிவித்துக் கொள்வேன். க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/45&oldid=1701947" இலிருந்து மீள்விக்கப்பட்டது