உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 தை விடப் பெரிய மாநிலம், 82 பாராளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட மாநிலம், 11 கோடி மக்களைக் கொண்டிருக் கின்ற உத்திரப் பிரதேசம்கூட இந்த 6 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி செய்யவில்லை. அதற்கு முன்பிருந்த தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினுடைய அந்தப் பரி பாலன காலத்திலேகூட, வந்த யுத்தங்களைத் தடுக்கின்ற அந்தக் காலத்தில்,- நான் அவர்களுடைய நாட்டுப்பற்றைக் குறை கூறு வதாகச் சொல்லக்கூடாது-- இந்த அளவு யுத்த நிதி தந்ததாக வரலாறு சின டையாது. அதை எதிர்க்கட்சிக்காரர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்வார்கள் என்று கருதுகினறேன். களைப் அந்த அளவுக்கு நாம் பொறுப்புணர்ச்சியோடு ந்தியா சொல்ல வினுடைய பாதுகாப்பிலே நடந்து காட்டியிருக்கிறோம். ளவிலே அல்ல. செயலளவிலே நடந்து காட்டியிருக்கிறோம். ஆகவே. இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு ஒரு ஊனம் வருமே யானால், ஒரு இடர் வருமேயானால் அந்த நேரத்திலே நாம் இந்தப் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை. பிரச்சினை பேசுவது, நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் சேர்ந்ததுதான் நாடு. அந்த நாட்டு மக்கள் இந்த மாநிலத்திலும் இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் இருக்கின்ற மக்களை வாழ வைப்பது, நாட்டு மக்களை வாழ வைப் பதுதான்! அவர்களை வாழ வைப்பதற்கு, இன்றைக்கு நமக்குள்ள அதிகாரங்களின் வாயிலாகத் திரட்டக்கூடிய நிதி ஆதாரங்கள் மிகக் குறைவானவைகளாக இருக்கின்றன. ஆகவே, நீங்கள் போதுமான அளவுக்கு நிதி தாருங்கள் என்று கேட்கிறோம். ஏதோ அவர்களுடைய கஜானாவிலிருந்து திறந்து அதைத் தர வேண்டும் இங்கிருந்து எடுத்துச் செல்கின்ற என்று நாம் கேட்கவில்லை. வரிப் பணத்தை, மீண்டும் மாநிலங்களுக்குப் பங்கிடுகின்ற நேரத் தில், அநீதி வழங்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் சுட்டிக் காட்டுகின்றோம். 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தி லும், 8-வது நிதித் திட்டக் குழுவிலும் நம்முடைய மாநிலம் எதிர்க்கட்சித் பெருமளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தலைவரவர்கள் இங்கே மெத்த ஆதங்கத்தோடு எடுத்துக் காட்டி யதைப்போல், 5-வது ஐந்தாண்டுத் திட்டம் வருமா. என்பது கேள்விக் குறியாக இன்றைக்கு நின்றுகொண்டிருக்கிறது. அது வராமல், இடையிலே விடுமுறை வந்தால், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. சாமிநாதன் அவர்களுக்குக்கூட மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் சென்ற முறை இங்கே பேசும் போது சொன்னார்கள்—(இப்போது வரவில்லை; தேர்தலில் ஈடு . வராதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/46&oldid=1701952" இலிருந்து மீள்விக்கப்பட்டது