பக்கம்:உருவும் திருவும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உருவும் திருவும்

என்று நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் நமக்கு விளக்கம்

தந்திருக்கிரு.ர்.

உளன் எனில் உளன், அவன் உருவம் இவ்உருவுகள் உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என, இலன் என, இவை குணம் உடைமையின் உளன் இரு தகைமை யொடு, ஒழிவு இலன் பரந்தே

என்பது திருவாய் மொழி (2907).

உருவமில்லாத மன்மதன் காதல் நெஞ்சில் புகுத்தும் துன்பங்கள் மிகுதி. இன்னும் அவனுக்கு உருவமிருப்பின் என்னென்ன செய்வனே?

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் உருவி லாளன் ஒறுக்குக் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை

என்று சிலப்பதிகாரத்தில் க வு ந் தி ய டி. க ள் உருவிலாத மன்மதன் உயிர்களை வாட்டும் துன்பத்தினை அடுக்கிக் கூறு கின்றார்.

உரு என்பது வடிவம், தோற்றம் (Presence) என்ற பொருள்களிலும் செந்தமிழ்க் கவிஞர் சிலரால் சிறந்த இடங்களில் கையாளப் பெற்றுள்ளது. கைகேயி பெற்ற வரத்தால் காடேகுகின்றான் காகுத்தன். அதுபொழுது மன்னுயிர்கள் அன்றித் தாய்க் கருவிலிருக்கும் உருவறியாப் பிள்ளைகளும் அழுதன என்று ஒர் அவல ஒவியத்தினையே தீட்டிக் காட்டுகிறார் கம்பநாடர்.

கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாட்த்து உள்ளுறையும் பூசை அழுத: உரு அறியாப் பிள்ளே அழுத; பெரியோரை என்சொல்ல? வள்ளல் வணம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்.