பக்கம்:உருவும் திருவும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவும் திருவும் 7

என்று தெய்வப் புலவராம் திருவள்ளுவர் கூறிப் போந்தார். இங்கு உரு என்பது வடிவம், தோற்றம் என்ற பொருளில் வ ழ ங் கு கி ன் ற து. வடிவாற் குறுகியவரை-தோற்றப் பொலிவு இல்லாதவரை-எளிதிலே வென்றுவிடலாம் என்று எண்ணுவது அறியாமையாகும். இது குறித்தே ‘கள்ளன நம்பினுலும் குள்ளன நம்பாதே என்று பாமரரும் கூறுவர். அதற்கு எடுத்துக்காட்டாக, குறுகிய வடிவுகொண்டு வந்து, மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு இரந்து பெற்று மூவுலகத்தையும் அளந்த திருமாலின் கதை கூறப்படு கிறது. இதனை நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்,

‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி என்று கூறுகின்றார். சங்கத் தமிழ்ப் புலவராம் மதுரைப் பொன் வாணிகளுர் மகளுர் நப்பூதனர்.

நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல்

என்று தாம் பாடிய முல்லைப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.

அடுத்து, பிறப்பு இறப்பு இல்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, உருவமின்றி அருவமாய்ப் பெயரற்று எங்கும் நீக்க மற நிறைந்திருக்கின்ற இறைவனை, வேண்டுவார் வேண்டிய வண்ணத்திலும் வடிவிலும் காண்கின்றனர். இதனையே மணிவாசகப் பெருமான், “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்று மில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ’ என்று பாடினர். யார் யார் எவ்வெவ் வடிவில் காண்கின்றார்களோ அவ்வவ் வடிவில் இறைவன் காட்சியளிக்கின்றான்.

வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட ஆண்டான் டுறைதலும் அறிந்த வாறே.