பக்கம்:உருவும் திருவும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உருவும் திருவும்

கரிகால் வளவன் என்னும் பழந்தமிழ்ச் சோழ மன்னனின் இளமை வாழ்விலே நிகழ்ந்த செய்தியினைக் குறிப்பிடுவர். அரசனின் அவைக்கு முதியவர் இருவர் வழக்கு ஒன்றினைக் கொணர்ந்தனர். ஆனால், அரசன் இளையவனுய் இருத்தலைக் கண்டு, இவன் நம்முடைய வழக்கினே முறையாக விசாரித்து நல்ல நீதி வழங்கும் ஆற்றல் உடையவனே எனவும் ஐயுற்ற னர். இக் கருத்தினைக் குறிப்பால் உணர்ந்தான் மன்னன். ஒருவர் தம் கருத்தைச் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஒர் அணிகலன் ஆவன் என்பது வள்ளுவர் வாக்கன்றாே?

கூருமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாருள்ே வையக்கு அணி.

-திருக்குறள்: 701.

எனவே அரசன் அவையினின்றும் நீங்கி, நரை திரை முடித்து முதியவகை வேடம் பூண்டுவந்து அவர்கள் வழக்கைத் தீர விசாரித்து அவர்கள் மனங்கொளும் வண்ணம் தீர்ப்பு வழங்கினன் என்ற செய்தியினைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி என்னும் நூல்கொண்டு அறியலாம்:

உரைமுடிவு காளுன் இளமையோன் என்ற கரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.

-பழமொழி நானுாறு: 6. இது குறித்தே,

உருவகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னர் உடைத்து.