பக்கம்:உருவும் திருவும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உருவும் திருவும்

“புதுமையை விரும்புவதிலும் வெளிமயக்கில் வீழ்ந்து விட்டிலைப் போல அழிவதிலும் இந்தியருக்கு இணையாக எவரையுமே கூறமுடியாது’ என்றார் ஆன்ற சான்றாேராம் இராமகிருட்டினர். அவரவர்தம் உருவும் திருவுமே இன்று தனி மனிதன் சமுதாயத்தில் மதிக்கப்படுவதற்குப் பெரிதும் காரணமாக அமைகின்றன. உருவுடன் திருவும் சேர்ந்தவர் கள் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். உருவின்றித் திரு இருந்தாலும் உயர்வு உண்டு. உரு மட்டும் இருந்து, திரு இன்றேல் உயர்வு அவ்வளவாகச் சொல்ல முடியாது. சிலரைக் கருவிலே திருவுடையார்’ என்று நாம் கூறுவதுண்டு. கரிகாலன் ‘உருகெழு தாயம் ஊழின் எய்தி’ என்று பட்டினப் பாலையிலே கூறப்படுகின்றான். உருவும் திருவும் பல்வேறு பொருள்களைக் குறித்து நிற்கும் சொற்களாகும். அதாவது, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகும். முதற்கண் உரு’ என்னும் சொல்லினைக் காண்போம்.

‘உரு’ என்பதற்குப் பல பொருள்கள் இருப்பினும் அழகு, வடிவு, தோற்றம், நிறம் என்னும் பொருள்களில் அச் சொல் பயின்று வருகின்றது. சிறு துரும்பும் பல்குத்த உதவும்: என்ற பழமொழி நாமனைவரும் அறிந்த ஒன்று. உருவிற் சிறியதும் ஒருகாலத்தில் உற்றுழி உதவும் என்பதே இதன் பொருள்.

மேலும், மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது’ என்ற சொல் நாட்டில் வழங்கி வருகின்றது. இதற்குச் சான்றாகக்