பக்கம்:உருவும் திருவும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 உருவும் திருவும்

தீண்டாமல் பர்ணசாலையோடு பெயர்த்துவந்த இராவணன் சீதையைத் தன் இதயமாம் சிறையில் வைத்தான் என்று கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிட்டதனை மறவாது நினைவு கூர்ந்து, போர்க்களத்தே இராமன் விட்ட அம்பினல் உடல் முழுதும் துளைக்கப்பெற்று இறந்து கிடக்கும் இராவணன் மார்பில் விழுந்து புரண்டு அழும் மண்டோதரியின் கூற்றால் பின்வருமாறு குடுப்பிட்டுள்ளான் கம்பன்:

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி

மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிர்இருக்கும் இடம்நாடி

இழைத்த வாருே கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில்

கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ

ஒருவன் வாளி. -கம்ப. யுத்த காண்டம். மண்டோதரி புலம்புறு படலம்: 29.

அடுத்து, சகோதர நேய ஒருமைப்பாட்டினைச் சித் திரிப்பது இராமாயணமாகும். தசரதன் பெற்ற நான்கு மைந்தரோடு வேட்டுவ குலத்திலே பிறந்த கங்கையிரு கரை யுடைய குகனும் சேர்ந்து ஐவராகி, பின் கிஷ்கிந்தையில் சுக்கிரீவனுடன் சேர்ந்து அறுவராகி, இறுதியில் இலங்கை வீடணனுடன் சேர்ந்து எழுவராகின்ற சிறப்பினை இராமா யணத்தில் கண்டு தெளியலாம்:

குகளுெடும் ஐவர் ஆனேம் முன்பு: பின் குன்று சூழ்வான் மகனெடும் அறுவர் ஆனேம்: எம்முழை அன்பின் வந்த அகமனர் காதல் ஐய, நின்னெடும் எழுவர் ஆனேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுங்தை.

-கம்ப. யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலம்: 143.