பக்கம்:உருவும் திருவும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சமயக் கருத்துக்கள் 103

ஆன்றாேன் அவ்வழித் தோன்றினன் ஆதலின் ஈன்றாேள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்

என்று விம்பசாரகதை கூறுகின்றது. குழந்தை சிறு வயதிலேயே துறவுநிலை எய்தும் எனக் கேட்ட மன்னர் சுத் தோதனர். சித்தார்த்தரை உலகத் துன்பங்கள் ஒன்றும் அறி யாதபடி வளர்த்து வந்தார். அவர்தம் பதிருைவது வயதில் அவர் மனம் கவர்ந்த யசோதரை என்னும் அரச குமாரியை மணம் செய்வித்தார். இருவர்தம் இல்லறப் பயனல் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக் குழந்தைக்கு இராகுலன் என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்த அன்றே சித்தார்த்தர் துறவு பூணுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் அமைந்து விட்டன.

சித்தார்த்தர் வயது முதிர்ந்த தொண்டு கிழவர், நோய் வாய்ப்பட்ட பிணியாளன், இறந்துபட்ட உடல் ஆகிய துன்பக் காட்சிகளை ஒருங்கே காண நேரிட்டது. அன்றே அவர் உலக வாழ்வின் நிலையாமையினையும், அளவற்ற துன்பத்தினையும் கண்டார். எனவே, உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று மனங்கொண்டார். அதற்கு வழி. நாட்டை விட்டுக் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிதலே என முடிவுக்கு வந்தார். அன்று நள்ளிரவிலேயே தம் அழகிய மனைவியையும், அருமை மகனையும், தாய் தந்தையரையும், அரசபோகங்களையும் துச்சமென மதித்துத் துறந்து காட்டிற் ருச் சென்றார்.

பல ஆண்டுகள் உடலை வருத்தித் தவங்கிடந்து, இறுதி யாகப் போதி மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபொழுது, பூரண ஞானம் பெற்றார். பூரண ஞான மெய்யுணர்வு பெற்ற சித்தார்த்தர் புத்தர் ஆர்ை. ஞான ஒளிபெற்றுப் பிறவித் துன்பத்தை யொழித்துப் பிறவாமை யாகிய முத்தி நெறியினை அடைதலே உலக உயிர்கள் உய்யும் நெறி என உணர்ந்தார், o