பக்கம்:உருவும் திருவும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 உருவும் திருவும்

தாம் உணர்ந்த உண்மைகளை நாடெங்கும் சென்று மக்களிடம் உபதேசிக்கத் தொடங்கினர். அவருக்கு முதலில் ஐந்து சீடர்கள் வாய்த்தனர். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தாம் கண்ட உண்மை களைப் பாமர மக்களிடம் போதித்து வெற்றிகண்டார். புத்தம், தருமம், சங்கம் என்னும் முப்பெரும் நிறுவனங்களைத் தோற்றுவித்தார். சாதி மத பேதம் பாராட்டாமல் மக்கள் மொழியாம் பாலி மொழியிலேயே உபதேசிக்கத் தொடங் கினர். கண்மூடித்தனமான கொள்கைகளைத் தகர்த்தெறிந் தாா.

அவருடைய தலையாய கொள்கைகள் ஆவன : இவ் வுலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் அழியக் கூடியவை; யாவும் நிலையற்றவை. மிகவும் நெருங்கியுள்ள பொருள் களினின்றும் நாம் நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். அதுவே பேரின்பம் அடையும் வழி” என்பதாகும். இக் கருத்து,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்

-திருக்குறள்: 341.

என்ற குறட் கருத்தோடு ஒப்புமையுடையதாகும். இவ்வாறு புத்தர்பிரான் சொல்லிவிட்டுத் தமது எண்பதாவது வயதில்அதாவது கி. மு. 483-ஆம் ஆண்டில் குசி என்னும் நகரத்தில் நிர்வாண மோட்சம் எய்தினர் அந்த நாள் வைசாக மாதத்தின் பூர்ணிமையும் விசாக நட்சத்திரமும் கூடிய செவ்வாய்க்கிழமை என்பர். அந்த நாளை உலகெங்கிலும் உள்ள பெளத்தர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

புத்தரின் ஆயிரக்கணக்கான சீடர்கள் அவருடைய கொள்கைகளை நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பரப் பினர். அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் இலங்கை, பர்மா