பக்கம்:உருவும் திருவும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 உருவும் திருவும்

மாறி மாறிச் சுழன்று பிறக்கும் பிறவிகள் பல உள என்பது புத்தரின் கொள்கையாகும். உலகமே துன்ப மயம்: அதிலிருந்து ஒருவன் விடுபடுவதே நிருவாணம். துக்கம், துக்க நிவாரணம், துக்க உற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் இவை பிக்குகள் மேற்கொள்ள வேண்டிய நால்வகை வாய்மை களாகும்.

இதனை மணிமேகலையில்,

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றேர் உறுவது

என்று வரும் தொடர்களால் அறியலாம்.

பிறவிப் பெருங்கடல் ந்ேதுவர் நீந்தார் இறைவ னடிசேரா தார். -திருக்குறள்: 10.

என்பதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. -திருக்குறள்: 350.

என்பதும் இதனையொத்த திருவள்ளுவர் கருத்துக்களாகும்.

மற்றுப் பற்றெனக் கின்றி கின்திருப் பாத மேமனம் பாவித்தேன்

என்பது சுந்தரர் தேவாரம்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு

என்பது திருவாய்மொழி,