பக்கம்:உருவும் திருவும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சமயக் கருத்துக்கள் 107

மணிமேகலையில் தேரவாத பெளத்தம் கூறப்படுகிறது. பெளத்த மதத்தில் இல்லறம் துறவறம் என்னும் இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தார் சாவக நோன்பிகள் எனப்படுவர். அவர்கள் மும்மணிகளை வணங்கிப் பஞ்ச சீலங்களைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஆனால், இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைதல் இயலாது. துறவற வழி நின்றவர், மும்மணிகளே வணங்கிப் பத்துவகைச் சீலங்களைப் கடைப்பிடித்து நான்கு வாய்மைகளை மேற்கொண்டு, அஷ்டாங்க மார்க்கத்தில் நின்று, ஞானம், யோகம், ஆபைானஸ்மிருதி முதலியவை களைச் செய்வார்களானல் பிறவா நிலையாகிய பேரின்பமாகிய நிர்வாண மோட்சத்தைப் பெறக்கூடும்.

பெளத்தர்களில் இல்லறத்தாரும், துறவறத்தாரும் புத்தம், தர்மம், சங்கம் என்றும் மும்மணிகளைச் சரணம் (அடைக்கலம்) அடைய வேண்டும். இதற்குத் திரி சரணம் என்பது பெயர்.

புத்தம் சரணம் கச்சாமி

(புத்தனிடம் அடைக்கலம் புகுகிறேன்.)

தர்மம் சரணம் கச்சாமி

(தர்மத்தினிடம் அடைக்கலம் புகுகிறேன்.)

சங்கம் சரணம் கச்சாமி

(சங்கத்தினிடம் அடைக்கலம் புகுகிறேன்)

இதை மூன்று முறை சொல்ல வேண்டும். அதாவது மும்மணியை மூன்று முறை வணங்க வேண்டும். ‘முத்திற மணியை மும்மையின் வணங்கி’ என்பது மணிமேகலைத் தொடராகும்,