பக்கம்:உருவும் திருவும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 உருவும் திருவும்

அஷ்டாங்க மார்க்கமாவன:

(1) நற்காட்சி. (2) நற்கருத்து. (3) நல்வாய்மை” (4) நற்செய்கை. (5) நல்வாழ்க்கை. (6) நன்முயற்சி. (7) நற்கடைப்பிடி. (8) நல்லமைதி என்பனவாகும்.

பஞ்ச சீலங்களாவன:

(1) எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமல் அன்பு பாராட்டு தல். (2) பிறர் பொருளில் இச்சை வையாமை. (3) கற்பு நெறி யில் சிற்றின்பம் துய்த்தல். (4) பொய் பேசாமல் உண்மை பேசுதல். (5) மயக்கத்தையும் சோம்பலையும் தரும் மது வகைகளை உட்கொள்ளாமை என்பனவாகும்.

இவ் வைந்தும் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றாேடு, இரவுவேளைகளில் து.ாய்மையான உணவினை மிதமாக உண்ணல், பூ சந்தனம் முதலிய வாசனைப்பொருள்களை நுகராமை, பஞ்சணையை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல் மூன்றும் சேர்ந்த எட்டும் “அஷ்டசீலங்கள்” எனப்படும். இவற்றின் வழி, இல்லறத்தாரின் சற்று உயர்நிலை அடைந்தவர் ஒழுகுவர்.

இவை எட்டோடு இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணுதிருத்தல், பொன், வெள்ளி முதலியவைகளைத் தொடாதிருத்தல் ஆகிய இரண்டும் சேர்ந்து தசசீலம்’ என வழங்கப்படும். தசசீலம் துறவிகள் ஒழுக வேண்டிய ஒழுக்கமாகும்.

பாலி மொழியில் உள்ள பிடக நூல்களில் கூறியுள்ள பெளத்தக் கருத்துக்களை அப்படியே தமிழில் மணிமேகலை யில்-குறிப்பாக மணிமேகலையின் இறுதிக் காதையான “பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை யில் நூலாசிரியர் சாத்தனர் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்,