பக்கம்:உருவும் திருவும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 உருவும் திருவும்

அடுத்து, ஊழ்வினையில் நம்பிக்கையுடையவர்கள் பெளத்தர்கள். இதனை,

பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக ஊழ்வினை வந்திவ னுயிருண்டு கழிந்தது

என்று மணிமேகலை மொழிகின்றது. கருமத்தின் விளை விலும் பெளத்தர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

மறஞ்செய் துளமெனின் வல்வினை யொழியாது ஆங்கள் வினைவங் தணுகுங் காலைத் தீங்குறு முயிரே செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்

என்பது சாத்தனர் வாக்கு.

உலக உயிர்கள் அனைத்தையும் கூற்றுவக் கடவுளாகிய இயமன் விட்டுவைப்பதில்லை: அவன் தவசிகள் என்றும், பிள்ளைபெற்ற இளம் பெண்கள் என்றும், பச்சிளம் பசலைகள் என்றும், கட்டிளங்காளைகள் என்றும் அருட்கண் நோக்குவ தில்லை. இதனை அறியாமல் செல்வ மயக்கில், கள் மயக்கத் தில் ஆழ்ந்து நல்லற நெறியினைத் துறந்து மக்கள் பாழ் பட்டுப் போகின்றார்களே என்று பதைபதைத்துக் கூறு கின்றார் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர். நெஞ்சைத் தொட்டு உலுக்கும் அப் பகுதி வருமாறு:

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னுன் இளையோர் என்னுன் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?

மணி. 6:97-104.