பக்கம்:உருவும் திருவும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சமயக் கருத்துக்கள் 111

உலகத்தில் கொடிய துன்பம் பசித் துன்பமாகும். அதனைத் தீர்ப்போர் தம் பெருமை சொல்லில் அடங்காது என்பது மணிமேகலையின் காப்பியத் தலைவி மணிமேகலை, தீவதிலகை வாயிலாக அறிகின்ற செய்தியாகும்.

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

பசிப்பிணி யென்னும் பாவி; அது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக்கு என்கா கிமிராது.

-மணி. 11: 76-81.

தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராம் புத்தர் பெருமான் கள்ளும் புலாலும் தவிர்க்கப்பட வேண்டுமென்று உபதேசித்தார்.

கள்ளடு குழிமுடை கழிசியும் நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில் எண்குதன் பிணவோ டிருந்தது போலப் பெண்டுட னிருந்த

நாகர் நாட்டின் குருமகனைக் கண்ட தமிழ்நாட்டுச் சாதுவன்,

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும் அல்லறஞ் செய்வோர் அருகரகு அடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்

என்று புத்திகூறித் திருத்துகின்றான்.