பக்கம்:உருவும் திருவும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 உருவும் திருவும்

விடாமல் இருந்தால் வாழ்வு நலமுடன் திகழும் என்ற வாழ்க்கையின் அடிப்படையான உண்மையினை உணர்த்தி விடுகின்றார் பாரதியார்.

நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் இல்லையேல் மக்கள் எத்துண்ை நலம் பெற்றிருப்பினும் பயனேதும் விளையாது. அதனுல் நாட்டுப்பற்றும் தாய்மொழிப் பற்றும் நிறைந்த பாரதியார் பாப்பாவுக்கு அவற்றை மனங்கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கின்றார்:

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா;

அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம் ஆன்றாேர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா!

செல்வம் கிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

அமிழ்தினும் இனியதான தமிழ்த் திருநாட்டையும், சொல்லில் உயர்வான தமிழ் மொழியினையும் இனிது எடுத்தியம்பி, தமிழைத் தொழுது படித்திடவேண்டும் என்று மிக்க ஆர்வத்துடனும் பக்தியுடனும் கூறுகின்றார் பாரதியார். சாதிகள் இல்லாத சமுதாயத்தின் உயர்வைச் சொல்லி, “நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் தாம் மேலோர்கள் என்று பாப்பாவுக்கு அறிவுறுத்து கின்றார்.

இறுதியாக, மனிதன் உலகின் எப் பகுதியில் இருந்தாலும் வாழ்ந்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாத செயல்களைக் குறிப்பிட்டுப் ‘பாப்பாப் பாட்டினை முடிக்கிறார் பாரதியார்: