பக்கம்:உருவும் திருவும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாப்பாப் பாட்டு 117

உயிர்களிடத்தில் அன்பு வேணும்:-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்:

வயிர முடைய நெஞ்சு வேணும்:-இது

வாழும் முறைமையடி பாப்பா!

மேலும்,

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு

-திருக்குறள் : 261.

கற்றதஞ லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்

-திருக்குறள் : 2.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்

-திருக்குறள் : 666

என்ற வள்ளுவர் நெறியில் பாரதியார் பாப்பாவிற்கு

அறிவுரை கூறித் தம் பாப்பாப் பாட்டை நலஞ்சிறக்க முடிக் கின்றார் என்பது மகிழ்தற்குரியது.

பாரதியாரின் பாப்பாப் பாட்டில் வாழ்வின் உண்மைகள் தெளிவாக வற்புறுத்தப்படுகின்றன. பாப்பாவிற்கு நல்வாழ் வின் நெறிமுறைகளைக் கூறி நல்வழி காட்டுபவர் பாரதி ஆவர்.