பக்கம்:உருவும் திருவும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பாரதியார் வாழ்வு

பாரதியார் தமிழ்நாடு செய்தவப் பயனுய்த் தோன்றிய இணேயிலாக் கவிஞர். அவர் பிறந்த காலம் இந்த வையத்து நாட்டிலெல்லர்ம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் காலம். காலத்திற் கேற்பக் கவிஞன் தோன்றுவான் என்ற மேலைநாட்டுக் கவிஞர் ஒருவரின் கூற்றிற் கிணங்கப் பாரதி தோன்றினர். அவர் பிறப்பதற்கு முன்னலே, அதற்கு அண்மைக் காலத்திலே கவிதை-தமிழ்க் கவிதை-இலக்கியம்-பழைய பிடி யி லேஎல்லையிலே சிக்கித் திணறியது. பழங் கவிதைகளின் செறிவும் அதில் இல்லை; இடைக்காலக் கவிதைகளின் மிடுக்கும் இல்லை. இப்படிப்பட்ட இடர்ப்பாடுற்ற காலத்தில் தோன்றிப் பழமையில் வேர் கொண்டு புதுமையைப் புகுத்திப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி. அவர் தோற்றுவித்த அப் புதுநெறியே இன்றும் தொடர்ந்து வளர்ந்துவரக் காண் கின்றாேம்.

திக்கெலாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில், எட்டையபுரத்தில் கி. பி. 1882ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்களில் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தோன்றினர். தோன்றிற் புகழொடு தோன்றுக’ எனும் வள்ளுவர் வாக்குக்கு ஒள்ளிய உருவாய் எதிர் காலத்திலே துலங்கினர். அவர் தந்தையார் சின்னசாமி ஐயரும், தாயார் இலக்குமி அம்மையாரும் அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றினர். பாரதியாருக்கு ஐந்தாண்டு நிறைவதற்கு முன்னலேயே தாயார் இயற்கை எய்தினர். எனவே தாயன்பையும் உடன்

சேர்த்துத் தந்தையே செலுத்தினர். இளமையில் தந்தை