பக்கம்:உருவும் திருவும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்வு 119

யாரே தனயனுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினர். ஆயினும் பாரதியாருக்குத் தமிழ் இலக்கியத்தின்பால் தடை படாத ஆர்வம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. அண்ணுமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தில் பாரதியாருக்கு ஈடுபாடு மிகுதி. அவர் கவிதை உள்ளம் இயற்கை அன்னையின் இணையற்ற எழிலிலே தோய்ந்து தோய்ந்து நெஞ்சம் நெக்குருகி நெகிழ்ந்தது. பன்முறை தன்னை மறந்த லயந்தனிலே’ இருந்திருக்கின்றார் பாரதியார். எட்டையயுரம் மன்னரிடம் தந்தையார் சின்னசாமி ஐயர் அலுவல் பார்த்தமையால், பாரதியார் அடிக்கடி தம்முடைய கவிதைகளை மன்னரிடம் பாடிக் காட்டுவார். மன்னர் மகிழ்ந்து இத்தகு மைந்தனைப் பெற்ற தந்தையைப் பாராட்டினர். ஆயின், அக்காலக் கல்வியிலே பாரதியாரின் மனம் ஈடுபடவில்லை.

தமிழ்ச்சுவை அறியாது மயங்கினர் நாட்டு மக்கள். இதனைப் பாரதியாரே பின்வருமாறு இடித்துரைக்கின்றார்:

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்: அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்

ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்: வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்.

வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்

சொல்லு வாரெட் டுணப்பயன் கண்டிலார்.

-சுயசரிதை : 32.

ஆங்கிலக் கல்வி மோகத்தாலே நாட்டு மக்கள் கம்பனையும் காளிதாசனையும் மறந்து, சேரன் தம்பி இசைத்த சிலம்பையும் தெய்வ வள்ளுவன் தந்த வான்மறையையும் மறந்து, கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என வாழ்கின்றனே என்று உள்ளம் எரிந்து எரிமலையாகக் குமுறுகின்றார் பாரதியார், -