பக்கம்:உருவும் திருவும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உருவும் திருவும்

தேர்வு முறை இன்று அரசாங்க அலுவல்களுக்கும் உறுதுணை யாக வைக்கப் பெற்றிருக்கின்றது.

பழங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் தலைமகன் தலைமகளுக்கிடையில் சில ஒற்றுமைகள் இருத்தல் வேண்டும் என்று எண்ணினர்கள். இதனைப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் (நூற்பா, 25) தொல்காப்பியனுர் குறிப்பிடு கின்றார்:

பிறப்பே குடிம்ை ஆண்மை யாண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே.

‘ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த பிராயமும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமுமெனப் பத்து வகைய தலைமகளொப்பினது பகுதி என்று பேராசிரியர் கூறுகின்றார். மேலும் தொல்காப்பியனர் உவமங்கள் நான்கு பொருள்களின் நிலைக்களஞகப் பிறக்கும் என்கிரு.ர்.

வினை பயன் மெய்யுரு வென்ற நான்கே வகை பெற வந்த வுவமத் தோற்றம்

_

என்பது அவர்தம் கருத்தாகும்.

அடுத்து, “திரு’ என்னும் சொல்லினைச் சிறிது ஆய்ந்து காண்போம். ‘திரு’ என்ற சொல்லும் உரு’ என்ற சொல் போன்றே பல பொருள்களைப் பயக்குமெனினும், சிறந்த சில பொருள்களையே ஈண்டு எடுத்துக் கொள்ளுவோம். முதற்கண் “திரு என்பது “அழகு என்னும் பொருண்மைத்து. இலக்குமி, செல்வம், பொலிவு முதலியன பின்னர்ச் சிறக்கும் பொருள் களாம். o