பக்கம்:உருவும் திருவும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவும் திருவும் 11

செல்வத்திற்கும் தெய்வமாக விளங்கும் இக்ைகுமியை நாம் திருமகள் என்கிருேம்.

திருவள்ளுவர் கூட,

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதல் வேறு

என்கிறார். கடிய நெடுவேட்டுவன் என்ற குறுநில மன்னன் பரிசில்தரக் காலந் தாழ்த்தாளுகப் பெருந்தலைச் சாத்தனர்.

முற்றிய திருவின் மூவரே யாயினும் பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே.

என்று பாடியுள்ளார். மேலும், பெருஞ்சித்திரளுர் என்ற புலவர் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசில் பெறச் சென்றபோது, வெளிமான், பெருந்தலைச் சாத்தனரிடம் நடந்துகொண்டதைப் போலவே, அவனும் பெருஞ்சித்திரன ரைக் காணுது, இதுகொண்டு செல்க!” என்று பரிசில் கொடுப்பக் கொள்ளாது பின்வருமாறு பாடினர்:

குன்றும் மலையும் பலபின் ஒழிய வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கென கின்றவென் நயந்தருளி ஈது கொண்டு ஈங்கனம் செல்க தான்என என்னை யாங்கறிங் தனனே, தாங்கருங் காவலன்? காணுது ஈத்தஇப் பொருட்கு யானேர் வாணிகப் பரிசிலன் அல்லன்; பேணி தினையனைத்து ஆயினும் இனிதவர் துணையளவு யறிந்து நல்கினர் விடினே.

-புறம் : 208.

உருவினைக் காணுது ஈத்த திருவினை மறுத்தார் புலவர். திருவின் உரு-அளவு முக்கியமன்று. திரு தரும் மன்னனின்