பக்கம்:உருவும் திருவும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உருவும் திருவும்

திருத்தோற்றம் (Presence)தான் முக்கியம் என்று உணர்ந்த செம்மாந்த நெஞ்சத்தை நாம் கண்டு வியக்கின்றாேம்.

உருவறியாத-ஒருவரையொருவர் நேரிற் கண்டறியாத

கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் நட்புக் கொண் டனர்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

என்ற குறட் கருத்துக்கு இலக்கியமாயினர். இறுதியில் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் துணிந்தபோதுதான் பார்த்தறியாத, உருவறியாத பிசிராந்தையார், தான் திருப் பெற்றிருந்த காலையில் வராவிடினும் திருத்துறந்து தவம் நினைந்து செல்லும் காலையில் உறுதியாக வருவார் என்று எண்ணினன்.

செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே

என்று உருவறியாத நிலையிலும் உறுதியாக எண்ணிய உயர்ந்த நட்புள்ளத்தை எண்ண எண்ண வியப்பு மேலிடு கின்றது.

தமிழ்நாட்டின் பல ஊர்ப் பெயர்களும் திருவில் தொடங்குவது கண்டு நாம் உள்ளம் மகிழலாம். திருவாளர்’ என்ற பழகுதமிழ் அழகுச்சொல் திரும்ப வந்தது கண்டு அகநிறைவு கொள்ளலாம்.

இறுதியாகப் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவரான சேக்கிழார் பெருமான் தம் திருத் தொண்டர் புராணத்தில் திரு. உரு என்ற இரண்டு சொற் களேயும் ஒருசேர ஞானத்தோடு சேர்த்துத் தக்க இடத்தில் வழங்கிச் சிறப்பும் பெறுகின்றார். சிவம் பெருக்கும் திருஞான