பக்கம்:உருவும் திருவும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்வு 121

இன்றி மக்கள் அடிமை ஆங்கிலக் கல்வி மோகத்தில் ஆழ்ந்து போலியுணர்வும், பொருந்தா நடைமுறைகளும், திருந்தா வாழ்வும் கொண்டு திரிந்து, செல்லரித்துக் சீர்குன்றிய வாழ்வு நடாத்தியதனையும் பற்றிப் பாடும்பொழுது, பாரதியார் உணர்ச்சியலைகளின் உந்தலிலே நின்று கவிதை வெறி பிடித்துப் பாடுகின்றார்.

பாரதியார் பன்னிரண்டாவது வயதை அடைகின்ற நேரத்திலே, அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டு மென்று ஏற்பாடுகள் நடந்தன. வள்ளுவத்தின் மாண் புணர்ந்த பாரதியாரும் தந்தையாரின் கூற்றுக்கு ஒப்புக் கொண்டு செல்லம்மாள் என்னும் அருங்குண நங்கையை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். ஆனால், திருமணம் நிகழ்ந்த மறு ஆண்டிலேயே பாரதியார்தம் அருமைத் தந்தையார் சின்னசாமி ஐயர் இறைவன் திருவடி நீழல் எய்தினர். தந்தை மறைவுக்குப் பின்னர் வறுமை யின் வாட்டம் பாரதியாரின் வாழ்வைப் பெருமளவு பாதித்தது.

இதனைப் பாரதியாரே தம் சய சுரிதையில்,

தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது:

தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்: சிங்தை யில்தெளி வில்லை: உடலினில்

திறனு மில்லை; உரனுளத் தில்லையால்: மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம்.

மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை. எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்? ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?

-சுயசரிதை: 46.

என்று வருத்தமுற்று குறிக்ப்பிட்டுள்ளார்.