பக்கம்:உருவும் திருவும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 உருவும் திருவும்

இதல்ை கங்கைக் கரைக்கண் அமைந்துள்ள புனிதமான நகராகிய காசியில் தம் அத்தை குப்பம்மாள் வீட்டில் சென்று தங்கினர். அத்தை கணவர் கிருஷ்ணசிவன் அறப்பணிகளிலே கருத்துான்றி நின்றவர்; நல்ல நெஞ்சம் வாய்ந்தவர். கல்விச் செல்வத்தின் மேன்மையை உணர்ந்திருந்த அவர், பாரதி யாரைக் கல்லூரியில் இந்தியும் வடமொழியும் பயின்றுவர ஏற்பாடு செய்தார். பாரதியாரும் நன்முறையிலே படித்து வந்தார் ஒய்வு நேரங்களில் கங்கைக் கரையின் கவிஞர்ந்த காட்சிகளில் ஈடுபட்டுத் தம்மை மறந்து நிற்பார்; படகில் ஏறி உலாவச் சென்று வருவார். கங்கைக் கரை வாழ்வு பாரதி யாரின் கவிதை உள்ளத்திற்கு மெருகு தந்தது.

1902 ஆம் ஆண்டில் பாரதியார் காசிமாநகருக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு எட்டையபுரத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். எட்டையபுர மன்னர் பாரதியார்மீது கொண்ட ஆழ்ந்த பற்றுக் காரணமாகத் தம் அரண்மனையில் ஆசிரியத் தொண்டு செய்யும்படி நியமித்தார். தமக்கு ஒய்வு கிடைத்த பொழுதெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். கீட்ஸ், பைரன் முதலானேர் கவிதைகளை முழு ஈடுபாட்டுடன் பயின்று அதில் தாம் கண்டு சுவைத்த நற்பகுதிகளைத் தமிழாக்கம் செய்து “ஷெல்லிதாசன் என்ற புனைபெயரில் பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார்.

ஒருசமயம் எட்டையபுர மன்னரோடு பாரதியார் டிசம்பர் விழாவிற்குச் சென்னை வந்தார். சென்னை வரும் பொழுது பாரதியார் மனைவியார் செல்லம்மாள் தமக்கு நல்ல புடவைகள் வாங்கி வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பாரதியார் இரண்டு வண்டி மூட்டைகள் நிறையப் பொருள்கள் வாங்கிச் சென்றிருந்தார். ஆல்ை, செல்லம்மாள் பிரித்துப் பார்த்தபொழுது, அவை அவ் வளவும் சங்கத் தொகை நால்களாகவும், ஆங்கில ஏடுகளாக வும் இருந்தன. இடையிலே தம் மனைவியார் ஆசையுடன் கேட்- புடவை யொன்றும் இருந்தது. அப்பொழுதும்