பக்கம்:உருவும் திருவும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்வு 123

பாரதியார் அழியும் பொருளைக் கொடுத்து அழியாச் செல் வுத்தைக் கொணர்ந்தேன்’ என்று ஆழ்ந்த கருத்துப்படக் கூறினராம்.

பின்னர், பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி யில் சிலகாலம் தமிழாசிரியராகத் தொண்டாற்றினர். அதன் பிறகு சென்னைக்கு வந்து சுப்பிரமணிய ஐயர் நடத்திய ‘சுதேச மித்திரன் செய்தித் தாளில் துணை ஆசிரியராகத் தொண்டாற்றினர். அப் பத்திரிகையில், விடுதலை வேட்கை கொள்ளாமல் அடிமை மோகத்தில் ஆழ்ந்து கிடந்த திறமில்லா மக்களைத் தாக்கி எழுதினர்; அவர்களைத் தட்டிச் சுதந்திரக் கனலை எழுப்பினர். அவர்தம் பாடல்களில் வீரம், அவலம், நகை முதலிய சுவைகள் பின்னிப் பிணைந்திருந்தன. இக் காலத்தேதான் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பாரதியாரோடு தொடர்புகொண்டு அரிய நண்பராளுர் என்பது குறிப்பிடத் தக்கது.

1906 ஆம் ஆண்டில் காசியில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு பாரதியார் வாழ்வில் ஒரு புதுத் திருப்பமாய் அமைந்தது. தாதாபாய் தெளரோஜியின் தலைமையில் நடை பெற்ற அம் மாநாட்டிலேதான் சுயராஜ்யம்’ என்ற சொல்லே பிறந்தது. அம் மாநாட்டிலிருந்து நேரே கல்கத்தா சென்று விவேகாநந்தரின் மாணவியரான நிவேதா தேவியைச் சந்தித்துப் பேசி, அவர் கூறிய அறவுரையால் பெண்ணின் பெரும் பண்புகளை உணர்ந்தார். பெண்ணின் உயர்வுகருதிப் பாடும் படியான நோக்கம் இவர் தொடர்பினலேயே பாரதியார் பெற்றார் என்று கூறலாம்.

1901 ஆம் ஆண்டில் இந்தியா’ பத்திரிகை வெளிவந்தது. இக்காலத்திலெல்லாம் பாரதியாரின் சென்னைக் கடற்கரைப் பேச்சுச் சிறப்புடையதாகத் துலங்கியது. பாரதியார் தீவிர வாதி. மிதவாதிகளின் கொள்கைகள் அவருக்குப் பிடிக்க வில்லை. திலகர் கட்சியினைப் பாரதியார் ஆதரிக்கவும், அதனல் திலகரைப் புகழ்ந்து பாரதியார் வாழ்க திலகன் நாமம் என்ற தலைப்பில், -