பக்கம்:உருவும் திருவும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்வு 127

கால்களுக்கிடையே கிடந்த கவிஞர் பெருமான், அவர் தம் நெருங்கிய நண்பராகிய குவளைக் கண்ணன் என்பவரால் காப்பாற்றப்பட்டார். இதிலிருந்து பாரதியார் ஒரளவு குணமடைந்தாலும் 1920-ஆம் ஆண்டு முதல் அவர் உடல் மெலியத் தொடங்கியது; உடல் தளர்ந்தும் இறுதிவரையில் உள்ளம் தளராமலேயே வாழ்ந்தார். 1921-ம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 11-ஆம் நாள் இறைவனின் இணையடி நீழலில் பாரதியார் ஆன்மா அமைதி பெற்றது.

மன்ன வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் கிறீஇத் தாமாய்க் தனரே

-புறம்: 165.

என்ற புறப்பாட்டிற்கு உரை விளக்கமாய்த் திகழ்கிறது பாரதியின் புகழ் சார்ந்த வாழ்வு. மேலும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ‘பாரதியும் பட்டிக் காட்டானும்: என்ற அவர்தம் கவிதையில்,

பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா!-அவன்

பாட்டைப் பண்ணுே டொருவன் பாடினன், அடா!

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா!-அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே அடா!-கவி துள்ளும் மறியைப் போலே துள்ளுமே, அடா! கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா-பசுங்

கன்றும்பால் உண்டிடாது கேட்குமே அடா!

-மலரும் மாலையும்: 100-101.

என்ற பாரதியின் பாநலத்தினை சொல்லும் நா மனக்க கேட்கும் செவி மணக்கப் புகழ்ந்து கூறியுள்ளார். பாரதி யாரின் நாடு இன மொழிப் பற்றினை அவர்தம் தேசீய கீதம்’ பாடல்களில் பரக்கக் காணலாம், அவர்தம் தோத்திரப்