பக்கம்:உருவும் திருவும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 உருவும் திருவும்

பாடல்களில் நாயன்மார் ஆழ்வார்களின் பாடல்களில் அமைந்துள்ள பக்திச் சுவையினைத் தேர்ந்து கண்டு திளைக் கலாம். பல்வகைப் பாடல்களில் அவர்தம் கவிதை வளத்

தினைக் கண்டு இன்புறலாம். கண்ணன் பாட்டில் உளவி யலின் நுட்பம் உணர்ந்து உவகைப் பெருக்கில் உணர்வற்றுக் கிடக்கலாம். பாஞ்சாலி சபதத்தில் பழைய காவியக் கூறே யாயினும், புதிய புதிய உத்திகள் கொண்டு பாரதியார் பாடல்கள் புனைந்துள்ள புதுமையினைச் சுவைத்து மகிழலாம். இறுதியாக நிற்கும் குயில் பாட்டிலே, சோகப் பின்னணியில் இழையோடும் குயிலின் கதையைக் கேட்டு நம் நெஞ்சைப் பறிகொடுத்துப் பின் நெஞ்சம் நெகிழ்ந்து நெக்குருகி நிற்க லாம். இவ்வாருகத் தமிழ்க் கவிதைப் பேராறு சிறிதும் வற்றி வறண்டுவிடாமல், காலத்திற்குக் காலம் கோலம் புதுக்கிக் கொள்ளை அழகு கூட்டி, வளஞ் சுரந்து வனப்போடு ஒடிக்கொண்டிருக்கிறது என்பதனைப் பாரதியாரின் பாடல் களைப் படித்துணர்ந்து மகிழ்ந்து இன்புறுவோமாக.