பக்கம்:உருவும் திருவும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தெய்வத் தமிழ்

அமிழ்தினும் இனிய நம் தமிழ்மொழி வரலாற்றுத் தொன் மையும் சிறப்பும் மிக்கது. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினள் தமிழ்த்தாய். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி’ என்று தமிழினத்தின் பழமையினைப் பாராட்டிப் பேசினர் பைந் தமிழ்ப் புலவர் ஒருவர். முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்க் “கன்னித் தமிழ் என்று கவினுற அழைக்கப்படும் மொழி தமிழ். உலக மொழிகளின் வரலாற்றினை உற்று நோக்கும்பொழுது தமிழின் தொன் மையும் சிறப்பும் நன்கு புலப்படும்.

எண்ணற்ற மொழிகள் இந் நிலவுலகில் பேசப்படு கின்றன. அவற்றில் எழுத்துவழக்குடையனவாய் வாழும் மொழிகள் சிலவே. அவற்றுள்ளும் நல்ல இலக்கியச் செம்மையும் சிறப்பும் பெற்ற மொழிகள் மிகச் சிலவே. உலகின் உயர்தனிச் செம்மொழிகளாகக் குறிப்பிடப்படும் மொழிகள் மிகமிகச் சிலவே. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் (Hebrew), சீனம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளே அத்தகைய சிறப்பிற்குரிய மொழிகளாகும். ஆனல், அம் மொழிகள் அனைத்தும் காலப்போக்கில் சிற்சில மாற்றங்கள் பெற்றன. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய மொழிகள் இன்று பெருவாழ்வு பெறவில்லை. பழைய சீன மொழி இன்று பெரும் மாறுதலைப் பெற்றுவிட்டது. வட மொழி பேச்சு வழக்கில் அருகி, இலக்கியத் தொன்மொழி