பக்கம்:உருவும் திருவும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 15

யாக ஏட்டளவில் நின்றுவிட்டது. தமிழ்மொழியோவெனில் இன்றும் பழைய இலக்கியச் செல்வங்களோடு வளமுற வாழ் கின்றது. தமிழ் நாட்டில் மூன்றரைக் கோடி மக்களால் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. கடல் கடந்த நாடுகளிலும் கன்னித் தமிழ் கணக்கற்ற தமிழர்களால் பேசப்பட்டு வரு கின்றது. எனவே ‘ஆரியம் போல உலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” என்றார் பேராசிரியர் மைேன்மணியம் சுந்தரம்பிள்ளை. இது குறித்தே கவிச்சக்கரவர்த்தியாம் கம்ப நாடர் தம் அழியாப் புகழ்பெற்ற இராமாயணத்தில் என்று முள தென்றமிழ் என்று புகழ்ந்து பாராட்டுவாராயினர்.

‘தமிழ் தமிழ் என்று சொன்னல் அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கக் காணலாம். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழுக்கு அமுதென்று பேர்; அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கவிதை முழக்கம் செய்தார். தமிழ் என்னும் சொல் இனிய இயற்றமிழ்ச் சொல் என்பது நம் பண்டைத் தமிழாசிரியர் துணிபு. எனவே, தொல்லாசிரியராம் தொல்காப்பியர்ை, தமிழென் கிளவியும் அதனே ரற்றே: என்று குறிப்பிட்டார். தமிழ் என்ற சொல்லிற்கு இனிமை என்று பொருளுண்டு. இனிமையும் நீர்மையும் தமிழென லாகும் என்று பிங்கல நிகண்டு பொருத்தமுறக் கூறுகின்றது. தமிழ் இலக்கியங்களிலும் இக்கருத்திலேயே தமிழ் என்ற சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.

தமிழ் வையைத் தண்ணம் புனல்

-பரிபாடல்: 6, 60.

பாலேய் தமிழர்

-சடகோபர் திருவாய்மொழி: 1, 5, 11.

புல்லாணித் தென்னன் தமிழ்

-கலிகன்றியார்-பெரிய திருமடல், கண்ணி. 131.