பக்கம்:உருவும் திருவும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உருவும் திருவும்

தமிழ் தழீஇய சாயல்

-சீவக சிந்தாமணி, 2026.

ஊறு மின்றமிழ் இயற்கை இன்பம்

-சீவக சிந்தாமணி, 2063

தமிழெனும் இனிய தீஞ்சொற் றையல்.

தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே.

-கம்பராமாயணம், பம்பைவாவிப் படலம், 29

மேற் குறிப்பிடப் பெற்ற தொடர்கள் தமிழின் இனிமையைப் புலப்படுத்த வல்லன. மேலும் வால்மீகி ராமாயணத்தில் ‘பேரறிவாளனுகிய அனுமன் தன்னுள்ளே பலவகையாகச் சிந்தித்து விதேக புத்திரிக்கு மதுர வாக்கி யத்தைக் கேட்பிக்கத் தொடங்கினன்’ (சுந்தர காண்டம், சர்க்கம், 31-1) என வரும் குறிப்பினைக் கொண்டு அம் மதுரமான மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே காவிய நாயகன் இராமனைக் குறிப்பிட வந்த கம்பர், தென் சொற் கடந்தான் வட சொற்கு எல்லை தேர்ந்தான் என்று குறிப்பிட்டுள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதியும், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணுேம்’ என்று பாடி மகிழ்ந்தார். மேலும் அவர் பலபடி கடந்து சென்று. ‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்” என்று குறிப்பிட்டார். தமிழ்விடு துரது ஆசிரியர், பாரதியாரினும் ஒரு படி மேலே சென்று, இருந்தமிழே உன்னல் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார்.

இவ்வாறு புலவர் பலரால் புகழ்ந்து பாராட்டப் பெற்ற தமிழ்மொழி தெய்வத்தன்மை நிறைந்தது. “சொல்லும் பொருளுமாய் இருக்கின்ற உமாதேவனை வணங்குகிறேன்’ என்றார் வடமொழிப் பெருங் கவிஞராம்