பக்கம்:உருவும் திருவும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 17

காளிதாசர். இம்மரபினை யொட்டியே, ‘ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க்கு உணர்த்திய மாதொரு பாகன் என்று ஒரு பழம் பாட்டும், “தழற்பொலி விழிக்கடவுள் தந்த தமிழ்’ என்று கம்ப ராமாயணமும், இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்’ என்று காஞ்சிப் புராணமும் சிவபெருமானைக் குறிப்பிடுகின்றன. வடமொழி போன்றே தென்மொழியாம் தமிழும் தெய்வ வடிவமாய்ப் பாராட்டப்படுவதுண்டு.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய். செந்தமிழோடு ஆரியனே. தமிழ்ச் சொல்லும் வடசொல்லுக்தாள் கிழல் சேர.

என்னும் தேவாரப் பாசுரங்களும், ‘தென்றமிழ் வட மொழியே’ என்னும் திவ்யப் பிரபந்தத் தொடரும் இக் கருத்தினை நன்கு வலியுறுத்துவனவாகும்.

தமிழ்ப் பாடலின் சொல்லழகிலும், சுவையழகிலும் தெய்வங்கள் தம் நெஞ்சைப் பறிகொடுத்துள்ளன. தெய்வத் தமிழ் என்று, தமிழ்மொழி பலவிடங்களில் குறிப்பிடப் பெறு

கின்றது.

“பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலே’ என்று குமரகுருபரர் தமிழின் பெருமையினை வியந்து போற்றுகின்றார்.

திருமழிசை யாழ்வாரின் சீடர் கணிகண்ணன். ஒருகால் திருமழிசை யாழ்வாருக்கும் காஞ்சி நகரப் பல்லவ மன்னனுக்கும் பகைமை ஏற்பட்டது. அதன் விளைவாகக் கணிகண்ணன் அரசனல் நாடுகடத்தப் படுகிரு.ர். அது பொழுது ஆழ்வார் திருவெஃகாவில் திருக்கோயில் முன்பே சென்று,

உ. தி.-2