பக்கம்:உருவும் திருவும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உருவும் திருவும்

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணு நீ கிடக்க வேண்டா-துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் யுேமுன்றன் பைங்காகப் பாய்சுருட்டிக் கொள்

என்று பாடினர். பாடிய அளவிலே, திருமால் மட்டுமின்றி, அந் நாட்டுத் தெய்வங்கள் அனைத்தும் ஆழ்வாரைப் பின் தொடர, “நகரேஷ- காஞ்சி’ என்று வடமொழி நூல்களாலும், கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்’ என்று திருநாவுக் கரசர் பெருமானலும்,

ஆடவர்கள் எங்ங னகல்வார் அருள்சுரந்து பாடகமும் ஊரகமும் பாம்பணையும்-டிேயமால் கின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றாே மன்றார் பொழிற் கச்சி மாண்பு

என்று ஆழ்வாராலும் பலபடியாகப் பாராட்டப் பெற்ற காஞ்சிமாநகர் இருண்டு பொலிவிழந்தது. அரசனும், தம் தவறுணர்ந்து தன் அமைச்சர்களோடு ஆழ்வாரைப் பின் தொடர்ந்து, “ஒரிர விருக்கை’ என்ற ஊரிலே திருமழிசை யாழ்வார், கணிகண்ணன் ஆகிய இருவரையும் கண்டு, காலில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கோரினன். ஆழ்வாரும் உள்ளம் நெகிழ்ந்து, தாம் சொன்ன வண்ணமே தமிழ்ப் பாட்டிற்குத் தலைசாய்த்த பெருமா ளேப் பார்த்து,

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி மணிவண்ணு நீ கிடக்க வேண்டும்-துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைங்காகப் பாய்படுத்துக் கொள்

என்ற அளவிலே, திருமால் மீண்டும் பழைய இடத்தில் எழுந் தருளினர் என்பது ஆழ்வார்களின் திவ்ய சரித்திரம் கொண்டு நாம் அறியும் செய்தியாகும்.