பக்கம்:உருவும் திருவும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 19

இது போன்றே சீகாழிப்பதி தோன்றிச் சிவம் பெருக்கும் திருஞானசம்பந்தராய் வீறுடன் விளங்கிய ஞானசம்பந்தப் பெருமானும் தெய்வத் தமிழ்ப் பாடல்கள் பாடிச் சிறப் புற்றார். சமணர்களோடு மாறுபட்ட சம்பந்தர். வைகை ஆற்றில் இட்ட ஏடு அழியாமல் வந்ததன்றாே? இதனை உள்ளடக்கியே,

யாரறிவார் தமிழருமை யென்கின்றேனென் அறிவீன மன்றாேவுன் மதுரைமூதூர் ரேறியும் நெருப்பறியும்

என்று மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி குறிப்பிடுகின்றது. மேலும், -

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு காலநதி நினைக்காவாக் காரணத்தி னறிகுறியே

என்று மனேன்மணிய ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும் பாடினர். திருஞானசம்பந்தர் தெய்வத் தமிழால் மேலும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

‘கற்றவர்கள் தொழுதேத்தும் காழி வேந்தர் திரு மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணுக்கினர். திருவோத்துாரில் ஆண்பனையைப் பெண்பனை யா க் கி னு ர். திருமறைக் காட்டிலே திருநாவுக்கரசால் திருக்கதவம் திறக்கப் பட்டதும் திருஞானசம்பந்தரால் திருக்காப்பிடப்பட்டதும் தேவாரத் தமிழ் பாட்டால் அல்லவோ! நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி நாயனர் முதலை உண்ட பாலன அழைத்ததும், “பாதஞ் சிவக்கப் பசுந்தமிழ் வேண்டிப் பரவை தன்பாற் துரது சென்ற தென்ஆரூர்த் தியாகர்’ என்றபடி பரவையால் துரது நடந்ததும் தமிழ்ப் பாட்டாலே அல்லவா? எனவே தான், திருவிளையாடற் புராண ஆசிரியர் பின்வருமாறு குறிப் பிடுகின்றார்: