பக்கம்:உருவும் திருவும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உருவும் திருவும்

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்ட பாலன அழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.

இக் கருத்தினையே திருக்குற்றாலத் தலபுராணம்,

வேலையில் வீழ்ந்த கல்லு ைென்குடம் புகுத்த வென்பும் சாலேயிற் கொளுவுந்தீயும் தரங்கநீர் வைகை யாறும் சோலையாண் பனையும் வேதக் கதவமுங் தொழும்பு கொண்ட வாலையாங் தமிழ்ப்பூஞ் செல்வி

எனக் குறிப்பிடுகின்றது.

மேலும் தமிழின் இனிமையை நுகரவேண்டும் என்பதற் காகவே தெய்வங்கள் இந்தத் தமிழ்மண்ணிலே வந்து அவ தாரம் செய்தன என்று மதுரைக் கலம்பகத்தில் (93) குமர குருபரர் குறிப்பிடுகின்றார்:

தமரர்ேப் புவன முழுதொருங் கீன்றாள்

தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவங் ததுவும் தனிமுத லொருே சவுந்தர மாறன னதுவும் குமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர்

கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக்

கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்?

இப் பாட்டிலிருந்து, தண்டமிழின் இனிமைச் சுவையை நுகரும் பொருட்டே உமாதேவி த டா த ைக ப் பிராட்டியாராய்த் திருவவதாரம் செய்தார் என்பதும், கண்ணுதற் பெருங் கடவுளாய்க் கழகமொடு அமர்ந்து விளங்கும் சிவபெருமான் சவுந்திர பாண்டியளுகத் தோன்றிஞர் என்பதும், குன்றம் எறிந்த குமரவேள்