பக்கம்:உருவும் திருவும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 21

உக்கிர குமார பாண்டியளுகத் தோற்றம் கொண்டார் என்பதும் தெற்றெனப் புலளுகின்றதல்லவா? மேலும் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் வடலூர் இராமலிங்க வள்ளலார் மனத்தே இனிக்கும் திருவாசகம் தந்த மணி வாசகப் பெருமான்,

சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்து மென்சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீங்தமிழின் o துறைவாய் நுழைந்தனையோ? வன்றி யேழிசைக் சூழல்புக்கோ

எனத் தம் திருச்சிற்றம்பலக் கோவையாரில் இறைவனின் தண்டாத தமிழ்ச்சுவை பருகும் ஆர்வத்தினைக் குறிப்பிட் டுள்ளார். இறைவனே பாணபத்திரன் பொருட்டுச் சேர மான் பெருமாள் நாயனருக்குத் தமிழில் திருமுருகப்பாசுரம் எழுதியதுண்டு. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி எனத் தொடங்கும் பாடலை ஏழைத் தருமியின் பொருட்டு எழுதிய அக்கவிக்குக் குற்றம் கூறினர் நக்கீரர். “ஒரு பிழைக்கா அரனர் முன் உரையிழந்து விழிப்பாரேல் அரியதுனது இலக்கணமென்று அறைவதும் அற்புதமாமே” என்று பாடிற்று மனேன்மணியம்.

“பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ! என மகாவித்துவன் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாராட்டப்பெற்ற தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான், “ஞால மளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்’ என்றார். கம்பநாடரோவெனில் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ என்று தமிழ் உலகையே அளந்து காட்டுவதற்குக் கருவியாக உள்ளது என்று பாடியுள்ளார். மேலும் இராமாயணத்தில் சுக்ரீவன் வானரப் படைகளுக்கு இலங்கைக்குச் செல்லும் வழியைக் குறிப்பிடும்பொழுது, வழியில் அகத்திய முனிவர் பொதியமலையின் தமிழ்ச் சங்கம் வைத்திருப்பதாகவும், அங்கே சென்று வானரங்கள் தமிழ்ச் சுவையில் ஈடுபட்டு அங்கேயே தங்கிவிடாமல், அம்மலையை