பக்கம்:உருவும் திருவும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உருவும் திருவும்

வலம் வந்து வணங்கிவிட்டு, மேலே பயணம் செல்ல வேண்டும் என்றும் சுக்ரீவன் கூறுவதாகத் தமிழின் இனிமையினைப் பாங்குறப் புலப்படுத்தியுள்ளார். அப்பாடல் வருமாறு:

தென்தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன்

தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல் என்றுமவன் உறைவிடமாம் ஆதலிளுல் அம்மலையை இறைஞ்சி ஏகிப் பொன்திணிந்த புனல்பெருகும் பொருெையனும் திருநதி பின்பு ஒழியக் - கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திரமாம் கெடுவ ரையும் கடலும் காண்டிர்!

-கம்ப. கிட் நாடவிட்டபடலம்: 31.

பதினேழாம் நூற்றாண்டின் இணையற்ற புலவராம் குமரகுருபரர் தமிழினிடத்தே தெய்வத்தன்மையைக் கண்டார். எனவே, தெய்வங்கள் தண்டாத தமிழார்வமும் தணியாத தமிழ் வேட்கையும் உடையவர்கள் என்று குறிப் பிடுகின்றார் முத்தமிழ்த் தெய்வம், முழுமுதற் பொருளாம் சிவபெருமானே என்று குறிப்பிடுகின்றார். “பண்முத் தமிழ்க்கொர் பயனே சவுந்திர பாண்டியனே. இதுபோன்றே அவர் மதுரை ஆலவாய் உறையும் அருள்மொழி அங்கயற் கண்ணி அம்மையைப் பல்வேறு வகையாகப் புகழ்ந்துரைக் கின்றார், ‘முதுதமிழ் உததியில் வருமொரு திருமகள்’ என்றும், “நறை பழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ் சுவையே’ என்றும், சங்கம் வளர்ந்திட நின்ற பொலங் கொடி’ என்றும், “தமிழோடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி’ என்றும் பாடியுள்ளார். இதுபோன்றே கலைமகளே. ‘மதுரம் ஒழுகுங் கொழி தமிழ்ப் பனுவல் துறைப் படியும் மடநடைக் கூந்தலம்பிடி’ என்றும், தமிழ்க் கடவுள் எனப் பாராட்டப்படும் முருகக் கடவுளைச் ‘சங்கத் தமிழின் தலைமைப் புலவர்’ என்றும், ‘தோலாத முத்தமிழ் நாவா’ என்றும், ‘தெளிதமிழின் வடித்திடு நவரசமே'