பக்கம்:உருவும் திருவும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 23

என்றும் பாடியுள்ளார். முருகன் கொண்ட தமிழ்ப் பற்றை விளக்கவே, “முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்’ என்று ஆன்றாேர் கூறியருளினர். தமிழின் இனிமையைக் கூறவந்த தமிழ்விடு தூது ஆசிரியர்,

பஞ்சிபடா நூலே பலர்கெருடாப் பாவேகீண் டெஞ்சியழுக் கேரு வியற்கலையே- விஞ்சுகிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையுஞ் செய்யுளே

என்று சிறப்புறப் புகன்றுள்ளார். புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி, மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து வானவீதியில் கோலங்கொண்டு வலம் வருகிருன் கதிரவன்; புறவிருளைப் போக்குகிருன். அகவிருளைப் போக்கி, மன மாசுகளைத் துடைக்கிறது. தமிழ். இருளை நீக்கி ஒளியை ஊட்டும் தமிழை-இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டும் தமிழை-ஒளி விளக்காம் ஞானத் தமிழைத்-தண்டியலங் காரம் என்ற தண்டமிழ் இலக்கண நூல்,

ஓங்கலிடைவங் துயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்திருள் கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னே ரிலாத தமிழ்

என்கிறது. மேலே குறிப்பிட்ட தெய்வத் தமிழின் சிறப் புக்களையெல்லாம் உள்ளடக்கிப் பாரதத்தைத் தமிழ்ப் படுத்திய வில்லிபுத்துாரார் மகளுர் வரந்தருவார், வில்லி பாரதத்தின் சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள் ளார்.

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்

திருப்பிலே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே கின்று கற்றாேர் கினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்.