பக்கம்:உருவும் திருவும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உருவும் திருவும்

பொதிய மலையிலே பிறந்த தமிழ், முச்சங்கம் வைத்து மொழி வளர்த்த பாண்டிய வேந்தரால் சங்கத் கொட்டிலில் தாலாட்டப் பெற்று, பல அற்புதங்களைச் சாதித்து, சாவா மூவாத் தமிழாய்க் கன்னித் தமிழாய்க் கவினுறக் கொலு வீற்றிருக்கின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி” போன்றே தமிழும் தெய்வத்தன்மை பொருந்தி வளமுற வாழ்கின்றது. அத்தகு தெய்வத் தமிழை, நாமும் பாரதியோடு சேர்ந்து,

வான மளங்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுங் தன்மணம் வீசி

இசை கொண்டு வாழியவே!

என்று பாடி மகிழ்ந்து போற்றுவோமாக.