பக்கம்:உருவும் திருவும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புறம் கூறும் அறம்

சிங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தே இலக்கியப் பெற்றி நிறைந்த இன் தமிழ்க் கவிஞர் பலர் வாழ்ந்தனர். புலவர்களே அன்றி நாட்டின் புரவலராம் மன்னர்களும் கவித்திறம் வல்ல கர்வலர்களாய் விளங்கினர். தமிழ் மக்களும், ‘நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே: மன்னன் உயிர்த்தே, மலர் தலை உலகம் என்று, மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி என்ற கோளுட்சிக் கொள்கை யில் அமைதியுடன் இன்பமாக வாழ்ந்தனர். சமயப் பொறை துவங்கிய நற்காலம் அது. கலைகளும் அவற்றின் நிலைகளும் நாடெங்கும் நல்ல முறையில் பரவி, மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தெடுப்பித்த தீஞ்சுவை கெழுமிய காலம் அது. மறத்துறையிலும் அறங்காத்தோம்பிய தமிழர்தம் அக்கால நாகரிகம் சீர்மையுற்றது; சிறப்புடன் துலங்கியது. இலக்கியத்தினைக் காலக்கண்ணுடி’ என்பர் அறிஞர். “மொழியின் வாயிலாக வாழ்க்கையினை வடித்தெடுப்பதே இலக்கியம் என்று மாத்யூ அர்னல்டு என்ற மேலை நாட்டுக் கவிஞரும், சிறந்த கருத்துக்கள் பொதிந்திலங்கும் குறிப்பேடு” என்று எமர்சன் என்ற அறிஞரும் குறிப்பிட்டுள்ள இலக் கணங்கள், புறநானுாறு எனும் பைந்தமிழ் இலக்கியத்திற்கு முற்றிலும் பொருந்துவனவாகும்.

அறத்தினை வற்புறுத்தாத எந்த நூலும் சிறந்த நூலாக மாட்டாது. அறவாழ்விற்கு எதிரான கருத்துக்களைக் கூறும் கவிதை, வாழ்க்கைக்கே உலவைக்க வந்த வைரியாகும்.

மேலும் கவிஞன் தான் எத்தகு மனவுணர்ச்சிகளைப் படிப்ப