பக்கம்:உருவும் திருவும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

34 உருவும் திருவும்

என்று மணிமேகலைக் காப்பியம் பசுவின் சிறப்பினைப் பல படப் பேசுகின்றது. ஆநிறை கவர்தல்’ என்ற புறப்பொருள் துறை பசுவின் சிறப்பினை மேலும் புலப்படுத்தும். சிலப்பதி காரத்தில், பழமையான ஆயர் வாழ்வினை,

ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை

-சிலப் :15: 120-121.

என்று கவுந்தியடிகள் கூறுவதினின்றும், இவ்வுண்மை மேலும் விளக்கமுறும். மதுரையை எரியூட்ட விரும்பிய கண்ணகி,

பார்ப்பார் அறவோர் பசுப்பத் திணிப் பெண்டிர்

மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று......

-சிலப்: வஞ்சினமாலை: 53-55.

அங்கியங் கடவுளுக்கு ஆணையிட்டனள். o ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்ற ஞரின் புறப்பாட்டு உலக ஒருமைப்பாட்டினைப் பரக்கப் பேசுவ தாகும்.

இறுதியாக, நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர் “நல்லது செய்தல் இயலாவிடினும் அல்லன செய்தலைக் கடிய வேண்டும் என்றும், அதுவே நல்லாற்றில் செலுத்தும் நெறி யாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே.

-ւյՈDւb : 195; 6இதுகாறும் கூறியவற்றால் பல்வேறு அறக்கருத்துக்களைத்

திறம்பட எடுத்து மொழியும் நூல் புறநானூறு என்பது “அங்கை நெல்லிக்கனி யெனப் போதருகின்றதன்றாே?