பக்கம்:உருவும் திருவும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வள்ளுவர் வழங்கிய வான்மறை

தமிழ்நாடு செய்த தவப்பயனப்த் தோன்றியவர் திரு வள்ளுவர். தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற அவர்தம் குறள்மொழிக் கிணங்கக் குன்றாத புகழொடு தோன்றி, உலகிற்கே வான்மறை வழங்கியவர் வள்ளுவர். இதனையே பாரதியாரும்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழ்நாடு வள்ளு வரைப் பெற்றெடுத்து உலகிற்கு வழங்கியதிற் பெருமை கொள்கின்றது. திருவள்ளுவரைப் பொய்யில் புலவர் என்றும், அவர் வழங்கிய குறளமுதத்தினைப் பொய்யாமொழி என்றும், அவர்காலப் புலவர்கள் சிறக்கப் பாராட்டியுள்ளனர். திரு வள்ளுவ மாலையில் திருவள்ளுவர் வழங்கிய பொய்யாமொழி’ என்ற தொடர் கருதத்தக்கது.

ஒரு புலவர் தம் வாழ்நாளிலேயே புலவர் பலராலும் பாராட்டப் பெறுதல் என்பது அரிய செய்தியாகும். அதிலும் கவிதை வளஞ்சான்ற சங்ககாலப் புலவர் பெருமக்களால் ஒருசேரப் பாராட்டப் பெறுவது என்றால், அச்செய்தி அரிய தொரு செயலாகும். திருவள்ளுவர் பெருமானை அவர் காலத்துப் புலவர்கள் புகழ்ந்து பாடிய செய்யுட்கள்தான் திருவள்ளுவ மாலையில் காணப்பெறுகின்றன. திருவள்ளுவர்க் குப் பின்வந்த பெரும் புலவர்கள் அவர்தம் கருத்துக்களை முன்னேர் மொழி பொருளைப் பொன்னேபோற் போற்று